» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கல்லிடைக்குறிச்சி மகளிர் அரபிக் கல்லூரியில் 11ஆவது பட்டமளிப்பு விழா
வியாழன் 29, ஜனவரி 2026 8:21:27 AM (IST)

கல்லிடைக்குறிச்சி நூருல் ஹிதாயா மகளிர் அரபிக் கல்லூரியில் 11ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் நூருல் ஹிதாயா மகளிர் அரபிக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை 13ஆவது ஆண்டு விழா, 11ஆவது பட்டளிப்பு விழா நடைபெற்றது. விழாவின் முதல் அமர்வில் துஆ மஜ்லிஸ் நடைபெற்றது. இரண்டாவது அமர்வில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு திருவிடைமருதூர் நூருல்ஹூதா பெண்கள் அரபிக் கல்லூரி முதல்வர் ஜெ. மஹ்பூபா தலைமை வகித்தார்.
ஆலிமாக்கள் ஏ. பாத்திமா பர்ஹானா, ஏ. யாஸ்மியாள், ரம்ஜான், மதரஸô மாணவிகள் சொற்பொழிவு ஆற்றினர். எப். நூர்ஜஹான் நன்றி கூறினார். மாலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு ரஹ்மத் ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அ. நாகூர்கனி தலைமை வகித்தார். பள்ளிவாசல் துணை இமாம் அ. தாஜூதீன் கிராஅத் ஓதினார். முகைதீன் பள்ளிவாசல் இமாம் பீ. முகம்மது இத்ரீஸ் தொடக்கவுரை ஆற்றினார்.
ஜமாத் பொருளாளர் என். அஜிஸ், தணிக்கையாளர் முகம்மது உசேன், நெசவாளர் காலனி ஜமாத் தலைவர் ரசூல், கோல்டன்நகர் ஜமாத் தலைவர் செய்யது மசூது ஆகியோர் முன்னிலை வகித்தனர். காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரி பேராசிரியர் ஏ.கே. முஹம்மது அஸ்பர் சிறப்புரையாற்றினார். திசையன்விளை அன்னை ஜலீலா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் ஏ. மர்ஜூக் ரஹ்மான், ஜமாத்துல் உலமா சபை மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. ஷேக்மீரான், அம்பாசமுத்திரம் வட்டாரத் தலைவர் முபாரக் அஹம்து, பெரியபள்ளிவாசல் ஜமாத் தலைவர் கே.எஸ். அப்துல்மஜித், சத்திரம் தெரு ஜமாத் தலைவர் எஸ்.எம். சாகுல்ஹமீது, ஜமாத்துணைத் தலைவர் கே.எம். ஷேக்மைதீன், ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் மு. அப்துல்ஹனிப் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நூருல் ஹிதாயா மகளிர் கல்லூரி முதல்வர் மு. ரஹ்மத் ரபீக், ஜமிலத்துல் ஆஷிபா, செய்யது ஆயிஷாபானு, ரிஸ்வானா, செய்யது யாஸ்மின், ஜெஸீரா ரோஷன், உம்மே சல்மா, சனாஷின், ஹாஜிரா ஆகிய 8 பேருக்கு ஆலிமா பட்டம் வழங்கினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தலைமை இமாம் எஸ். முகம்மது முஸம்மில் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் : டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
சனி 20, ஜூன் 2026 5:19:42 PM (IST)

குற்றாலத்தில் குளுகுளு சீசன் களைகட்டியது : ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!
சனி 20, ஜூன் 2026 3:26:04 PM (IST)

அரசுக்கு ரூ.1.92 கோடி வருவாய் இழப்பு: முன்னாள் பேரூராட்சித் தலைவருக்கு 3 ஆண்டு சிறை!
சனி 20, ஜூன் 2026 11:31:55 AM (IST)

நெல்லை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: 9 பேர் மீது வழக்குப்பதிவு!
சனி 20, ஜூன் 2026 11:03:42 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா கோலாகல தொடக்கம்:ஜூன் 28-ல் பெருந்தேரோட்டம்!
சனி 20, ஜூன் 2026 10:40:35 AM (IST)

அரசாணைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்: தென்காசி வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 5:16:31 PM (IST)


