» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய மேம்பாலங்கள் : முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்!
வியாழன் 26, பிப்ரவரி 2026 5:14:13 PM (IST)

திருநெல்வேலியில் வண்ணாரப்பேட்டை புதிய தாமிரபரணி மேம்பாலம் மற்றும் சேரன்மகாதேவி இரயில்வே மேம்பாலத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
வண்ணாரப்பேட்டை தாமிரபரணி மேம்பாலம் (ரூ. 51 கோடி): நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், மணிமூர்த்தீஸ்வரம் சந்திப்பு முதல் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வரையிலான 4.400 கி.மீ நீளச் சாலை அகலப்படுத்தப்பட்டது. இதில் 221 மீட்டர் நீளம், 10.25 மீட்டர் அகலம் மற்றும் 13 கண்களுடன் கூடிய உயர்மட்டப் பாலம், பெட்டிப் பாலங்கள் உள்ளிட்ட பணிகள் மொத்தம் ரூ. 51 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன.
இன்று இந்தப் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வண்ணாரப்பேட்டை பாலத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வஹாப், மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மு. துரை ஆகியோர் முன்னிலையில் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது.
சேரன்மகாதேவி இரயில்வே மேம்பாலம் (ரூ. 132.06 கோடி): திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் சாலையில் ரூ. 132.06 கோடி மதிப்பீட்டில் சேரன்மகாதேவி பகுதியில் புதிய இரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ்:21.400 கி.மீ தார்ச்சாலை, 5 சிறுபாலங்கள், 38 குறுபாலங்கள்.7.48 கி.மீ மழைநீர் வடிகால்கள், பேருந்து நிழற்குடைகள். உயர்கோபுர மின்விளக்குகள், சூரிய ஒளி விளக்குகள் மற்றும் தடுப்புச் சுவர்கள்.தேவையான எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுப் பலகைகள் என அனைத்துப் பாதுகாப்பு வசதிகளுடன் இப்பணிகள் நிறைவுபெற்றுள்ளன.
இந்நிகழ்ச்சியில் கண்காணிப்புப் பொறியாளர் முருகேசன், கோட்டப் பொறியாளர் ராஜசேகர், உதவி கோட்டப் பொறியாளர்கள் சண்முகநாதன், உமாதேவி, உதவிப் பொறியாளர் ராஜேந்திரன், சாலைப் பாதுகாப்பு வல்லுநர் பூசன்குமார், கவுன்சிலர் கந்தன், முக்கிய பிரமுகர் முத்துபாண்டி (எ) பிரபு உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சி.ஆர்.பி.எப் காவலர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு : இளைஞர்கள் பயன்பெறலாம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:35:16 PM (IST)

தாய்-மகன் வெட்டப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது; இருதரப்பு மோதல் - எஸ்பி நேரில் ஆய்வு
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:52:27 AM (IST)

வாக்களிக்கச் சென்றவர் சாலை விபத்தில் உயிரிழப்பு : குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரிக்கை!
புதன் 29, ஏப்ரல் 2026 12:15:23 PM (IST)

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை!
புதன் 29, ஏப்ரல் 2026 11:37:36 AM (IST)

விவசாயி மீது துப்பாக்கிச் சூடு: சார் ஆட்சியர் ஆஜராகி விளக்கம் - உயர்நீதிமன்றம் விசாரணை
புதன் 29, ஏப்ரல் 2026 11:33:46 AM (IST)

மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை : முதல்கட்ட கணினி குலுக்கல் ஒதுக்கீடு பணி நிறைவு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:17:19 PM (IST)



தமிழன்Feb 26, 2026 - 07:15:36 PM | Posted IP 104.2*****