» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாஜகவில் இணைந்த நெல்லை, தூத்துக்குடி முக்கியப் பிரமுகர்கள்!

வெள்ளி 20, மார்ச் 2026 11:26:02 AM (IST)



திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சென்னையில் உள்ள மாநிலத் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பாளையங்கோட்டை நகராட்சியின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய மறைந்த மகாராஜா பிள்ளை அவர்களின் பேரன் சுந்தர் மகாராஜன் முறைப்படி பாஜகவில் இணைந்தார். இவருடன், தூத்துக்குடியைச் சேர்ந்த ஓபிஎஸ் அணியின் ஆதரவாளரும் செயற்குழு உறுப்பினருமான ரமேஷ் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்த நிகழ்வின் போது திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் முத்து பலவேசம், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்தரங்கநாதன், திருநெல்வேலி தெற்கு மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வம், தென் மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக மாவட்டத் தலைவர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory