» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மழை, கொரோனா காலங்களில் உங்களோடு நின்றவள் நான்: அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
சனி 18, ஏப்ரல் 2026 10:24:27 AM (IST)

கொரோனா மற்றும் வெள்ள பாதிப்பு போன்ற இக்கட்டான காலங்களில் மக்களுக்காக நான் களத்தில் நின்று பணியாற்றியுள்ளேன். தேர்தலுக்காக மட்டும் வரும் கட்சி திமுக கிடையாது என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சிக்கு உட்பட்ட 5, 35, 36, 44, 51 ஆகிய வார்டுகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தில், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
திரு.வி.க. நகரில் தொடங்கி இந்திரா நகர், பிரையண்ட் நகர், கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உரையாற்றிய அமைச்சர் பேசியதாவது: "கீழடி அகழாய்வு அறிக்கையை ஏற்பதற்குக் கூட மனமில்லாத மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்குத் தேவையான கல்வி நிதி உள்ளிட்ட எவ்வித நிதியுதவியையும் முறையாக வழங்குவதில்லை. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்குவோம் எனத் தமிழகத்திற்கு எதிராகச் செயல்படுகிறது.
பாஜகவின் முகமூடியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு எதையும் செய்யாத இந்தத் துரோகக் கூட்டணியை நாம் வீழ்த்துவது காலத்தின் கட்டாயம். திராவிட மாடல் ஆட்சியில் 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற அடிப்படையில் அனைவரும் பயனடைந்துள்ளனர்.
கொரோனா மற்றும் வெள்ள பாதிப்பு போன்ற இக்கட்டான காலங்களில் மக்களுக்காக நான் களத்தில் நின்று பணியாற்றியுள்ளேன். தேர்தலுக்காக மட்டும் வரும் கட்சி திமுக கிடையாது. எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து முதலமைச்சர் ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பேசினார்.
பிரையண்ட் நகரில் பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் நிர்வாகிகள் அமைச்சர் கீதா ஜீவனுக்கு வீரவாள் வழங்கி, மீண்டும் வெற்றி பெற்று மக்கள் பணியாற்ற வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 5-வது வார்டு பிரச்சாரத்தின்போது, அமைச்சர் அனைவருக்கும் பதநீர் வழங்கியதுடன், தானும் அருந்தி தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
இக்கூட்டத்தில் திமுக மாவட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க சக்சம் செயலி: ஆட்சியர் தகவல்!
சனி 18, ஏப்ரல் 2026 5:10:16 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு: ராட்சத பலூனை பறக்கவிட்டார் மாவட்ட ஆட்சியர்!
சனி 18, ஏப்ரல் 2026 4:02:30 PM (IST)

வாக்குப்பதிவு நாளன்று தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:10:16 PM (IST)

நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்க்கவும்: பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:28:42 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி: தேர்தல் பார்வையாளர்கள், ஆட்சியர் ஆய்வு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:33:24 AM (IST)

நெல்லையில் தேர்தல் பணிகள் தீவிரம்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ஆம் கட்டப் பயிற்சி!
புதன் 15, ஏப்ரல் 2026 4:16:15 PM (IST)


ஊர் மக்கள்Apr 18, 2026 - 12:09:35 PM | Posted IP 104.2*****