» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பார்சல் சேவைக்கு குறைந்த கட்டணம்; கூடுதல் பாதுகாப்பு: பொதுமக்களுக்கு அஞ்சல் துறை அழைப்பு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:52:48 PM (IST)
இந்திய அஞ்சல் துறை தனது பார்சல் சேவைகளை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தி வழங்குகிறது. இச்சேவைகளைப் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜி. செந்தில்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் : வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில், பார்சல் சேவையில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பார்சல்களைப் பெறுபவரின் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து சேர்த்தல்.ரகசிய குறியீடு (OTP) அடிப்படையிலான விநியோக முறை.
வணிக நோக்கில் பார்சல்கள் அனுப்புவோருக்குத் தபால் நிலையத்திலிருந்து வந்து பெற்றுக்கொள்ளும் (Pickup) வசதி. இந்தியா முழுவதும் பார்சல்களை அனுப்ப ஒரே மாதிரியான கட்டண முறை பின்பற்றப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட பார்சல்களை இணையதளம் மூலம் எங்குள்ளது (Tracking) என்பதை எளிதாகக் கண்டறியலாம். இந்தியாவிற்குள் மட்டுமன்றி, வெளிநாடுகளுக்கும் பார்சல்களை அனுப்பும் வசதி உள்ளது.
வாடிக்கையாளர்களின் வசதிக்காகத் தலைமை அஞ்சலகங்களில் பிரத்யேகப் பார்சல் பேக்கிங் மையங்கள் செயல்படுகின்றன. அனைத்து கிளை அஞ்சலகங்களிலும் இச்சேவை கிடைக்கிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 9841875710 மற்றும் 9791655030 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்களிக்கச் சென்றவர் சாலை விபத்தில் உயிரிழப்பு : குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரிக்கை!
புதன் 29, ஏப்ரல் 2026 12:15:23 PM (IST)

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை!
புதன் 29, ஏப்ரல் 2026 11:37:36 AM (IST)

விவசாயி மீது துப்பாக்கிச் சூடு: சார் ஆட்சியர் ஆஜராகி விளக்கம் - உயர்நீதிமன்றம் விசாரணை
புதன் 29, ஏப்ரல் 2026 11:33:46 AM (IST)

மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை : முதல்கட்ட கணினி குலுக்கல் ஒதுக்கீடு பணி நிறைவு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:17:19 PM (IST)

கோடை வெயில்: நெல்லை அணைகளின் நீர்மட்டம் சரிவு – 52 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 4:49:57 PM (IST)

நெல்லை அருகே பெண்ணைத் தாக்கி 29 பவுன் நகை கொள்ளை - சிறுவன் உட்பட 4 பேர் கைது!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:38:01 PM (IST)



சீனாவுக்குApr 28, 2026 - 10:22:57 PM | Posted IP 172.7*****