» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் : ஆளுநரை வலியுறுத்தி முதியவர் திடீர் சாலை மறியல்!
வியாழன் 7, மே 2026 12:49:53 PM (IST)

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் அரசியல் இழுபறிக்கு இடையே, தவெக தலைவர் விஜயை உடனடியாக ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவில்பட்டியில் முதியவர் ஒருவர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (84) என்ற முதியவர் இன்று திடீரெனச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தைத் தலைமை தாங்கும் விஜயை, ஆளுநர் உடனடியாக ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருந்தது.
போராட்டத்தின் போது அவர் உரக்கக் கத்தியபடி, "விஜயை ஆட்சி அமைக்க அனுமதியுங்கள், இல்லையென்றால் என்னைக் கைது செய்யுங்கள்" என போலீசாரிடம் முரண்டு பிடித்தார். வயதான காலத்தில் அவர் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதைக் கண்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வியப்புடன் பார்த்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட முதியவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கலைந்து செல்ல மறுத்ததால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, போலீசார் அவரைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
தமிழக அரசியலில் நிலவும் 'மெஜாரிட்டி' விவகாரம், சாதாரண மக்களிடையே, குறிப்பாக முதியவர்களிடையே கூட எந்த அளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழைய குற்றாலத்தில் ரூ.20 நுழைவு கட்டணம் : காலை 7 முதல் மாலை 5 வரை மட்டுமே அனுமதி!
வியாழன் 7, மே 2026 10:35:05 AM (IST)

வேலைவாய்ப்பிற்கு வழிவகுக்கும் தொழிற்பழகுநர் முகாம்: இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு!
புதன் 6, மே 2026 8:44:22 PM (IST)

நெல்லையில் ஓடை போல் மாறிய தாமிரபரணி ஆறு: அணைகளின் நீர்மட்டம் சரிவு!
புதன் 6, மே 2026 8:26:37 PM (IST)

குமரி, நெல்லை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
புதன் 6, மே 2026 4:15:21 PM (IST)

தேர்தல் தோல்வியால் விபரீத முடிவு : அ.தி.மு.க. தொண்டர் தற்கொலை!
செவ்வாய் 5, மே 2026 12:51:25 PM (IST)

தென்காசியில் 4 தொகுதிகளைக் கைப்பற்றிய திமுக கூட்டணி: சங்கரன்கோவில் அதிமுக வசமானது!
செவ்வாய் 5, மே 2026 8:52:28 AM (IST)



Balaமே 7, 2026 - 01:15:13 PM | Posted IP 172.7*****