» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய காதலன்! இளம்பெண் தற்கொலை முயற்சி; 3 பேர் மீது வழக்குப் பதிவு!
செவ்வாய் 9, ஜூன் 2026 7:51:41 AM (IST)
சாத்தான்குளம் அருகே திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய காதலன், அவரது தாய் மற்றும் சகோதரி உட்பட 3 பேர் மீது அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளம்பெண் நடத்திய தர்ணா போராட்டத்தைத் தொடர்ந்து, காதலன், அவரது தாய் மற்றும் சகோதரி உட்பட 3 பேர் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கீழப்புளியங்குளத்தைச் சேர்ந்த முருகப்பெருமாள் மகள் முத்துஷாலினி முதுநிலைப் பொறியியல் பட்டதாரி. இவர் தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸும் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தபோது நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, சுபாஷ் சந்திரபோஸுக்கு அவரது குடும்பத்தினர் வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் செய்வதை அறிந்த முத்துஷாலினி, இதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் முத்துஷாலினியைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் விரக்தியடைந்த முத்துஷாலினி இருமுறை தற்கொலைக்கு முயன்று, உறவினர்களால் மீட்கப்பட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
மேலும், சுபாஷின் தாய் மங்கையர்க்கரசி, சகோதரி அம்சவள்ளி ஆகியோர் முத்துஷாலினியைக் கண்டித்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சுபாஷ் சந்திரபோஸுக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருப்பதை அறிந்த முத்துஷாலினி, அவரது வீட்டின் முன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சகாய சாந்தி மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஏமாற்றிய காதலன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர் போராட்டத்தைக் கைவிட்டார். இப்புகாரின் அடிப்படையில், காதலன் சுபாஷ் சந்திரபோஸ், அவரது தாய் மங்கையர்க்கரசி, சகோதரி அம்சவள்ளி ஆகிய 3 பேர் மீதும் அனைத்து மகளிர் காவல் துறையினர் குற்ற வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது: போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
சனி 13, ஜூன் 2026 8:57:57 AM (IST)

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 12, ஜூன் 2026 10:41:23 AM (IST)

லாரி ஓட்டுநர் தலை துண்டித்துக் படுகொலை : உறவினர்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:19:43 AM (IST)

ஐந்தருவி, பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை: சிற்றருவி, புலியருவியில் உற்சாக குளியல்!
வியாழன் 11, ஜூன் 2026 11:21:31 AM (IST)

மும்பை தாதர் - சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு : பயணிகள் கோரிக்கை!
வியாழன் 11, ஜூன் 2026 10:11:04 AM (IST)



சுபாஷ்Jun 11, 2026 - 03:29:25 PM | Posted IP 172.7*****