» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கள் இறக்குமதிக்கு அனுமதி: உயர்நீதிமன்ற பரிந்துரையை அமல்படுத்த வழக்கறிஞர் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
வெள்ளி 12, ஜூன் 2026 3:28:23 PM (IST)

உயர்நீதிமன்ற பரிந்துரையின் பேரில், தமிழ்நாட்டில் கள் இறக்குமதி அனுமதியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
செயற்கையான மதுவை விற்கும் தமிழக அரசு, இயற்கையான பனை மரத்திலிருந்து கிடைக்கும் கள்ளைத் தடையின்றி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்துத் தூத்துக்குடியில் சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் எஸ்.பி.சிலுவை செய்தியாளர்களிடம் கூறியதாவது: "சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, பனை விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் பனை மரத்துக் கள்ளை இறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளார்.
இந்த உத்தரவு, கடந்த 40 ஆண்டுகாலமாகக் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வேண்டித் தொடர்ந்து போராடி வரும் லட்சக்கணக்கான பனை விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. பனை விவசாயிகள் சார்பாக நீதியரசருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
"பனை விவசாயி மணிகண்டனைக் காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா காலில் சுட்ட விவகாரம் தொடர்பான வழக்கு மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயி மணிகண்டன், போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறை பதிவு செய்த வழக்குகளைச் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பாதிக்கப்பட்ட மணிகண்டன் குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய நீதியாகும்.
மத்திய அரசின் உணவுத் தரச் சான்றில் கள் என்பது ஒரு ஊட்டச்சத்து மிக்கப் பானமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு மற்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது போன்று, பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்ய உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.
மேலும், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்பட்ட பனை விவசாயி மணிகண்டனுக்குத் தமிழக அரசு உடனடி நிவாரணமாக ரூ.2 லட்சமும், மருத்துவச் செலவுகளுக்காக ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், தமிழகம் முழுவதும் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பனை விவசாயிகளைத் திரட்டிப் பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபடுவோம்," என அவர் எச்சரித்தார்.
பேட்டியின் போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட பனை விவசாயி மணிகண்டன் மற்றும் பனை தொழிலாளர்கள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது: போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
சனி 13, ஜூன் 2026 8:57:57 AM (IST)

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 12, ஜூன் 2026 10:41:23 AM (IST)

லாரி ஓட்டுநர் தலை துண்டித்துக் படுகொலை : உறவினர்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:19:43 AM (IST)

ஐந்தருவி, பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை: சிற்றருவி, புலியருவியில் உற்சாக குளியல்!
வியாழன் 11, ஜூன் 2026 11:21:31 AM (IST)

மும்பை தாதர் - சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு : பயணிகள் கோரிக்கை!
வியாழன் 11, ஜூன் 2026 10:11:04 AM (IST)



மக்களின் ஒருவன்Jun 12, 2026 - 06:03:37 PM | Posted IP 172.7*****