» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கீழூர் ரயில் நிலையம் அருகே சாலை, பாதாள சாக்கடை மூடி சேதம் - சீரமைக்கக் கோரிக்கை!
திங்கள் 22, ஜூன் 2026 5:44:27 PM (IST)

தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையம் அருகே சேதமடைந்து காணப்படும் சாலை மற்றும் உடைந்து கிடக்கும் பாதாளச் சாக்கடை மூடியை உடனே சீரமைத்துத் தர வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாநகர மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாவட்ட துணைத் தலைவர் ஆதிநாத ஆழ்வார் மாநகராட்சி ஆணையருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: தூத்துக்குடி கீழூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் அமைந்துள்ள ரயில்வே சாலையின் ஆரம்பப் பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை (கான்) மூடி உடைந்து, எவ்வித பராமரிப்பும் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள சாலையும் மிகவும் சிதிலமடைந்து மேடு, பள்ளமாகக் காணப்படுகிறது.
இவ்வழியாகத்தான் அனைத்துப் பேருந்துகளும், சிற்றுந்துகளும், ஆம்னி பேருந்துகளும் மற்றும் கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. தூத்துக்குடியில் இருந்து பிற ஊர்களுக்கு ரயில்கள் செல்லும் நேரங்களிலும், வெளிஊர்களில் இருந்து தூத்துக்குடிக்கு ரயில்கள் வரும் நேரங்களிலும் இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
இப்பகுதியைச் சுற்றி காராப்பேட்டை பெண்கள் நாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் செயின்ட் சேவியர்ஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை அமைந்துள்ளன. இதனால் பள்ளி மாணவர்கள் இச்சாலையைத்தான் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர, தினசரி சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் பயணிகளும், பொதுமக்களும் இந்த ரயில்வே நிலையச் சாலையையே பயன்படுத்துகிறார்கள்.
பராமரிப்பில்லாமல் மூடப்படாமல் இருக்கும் கான்களால் எப்போது வேண்டுமானாலும் பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் சாலை போக்குவரத்து வசதிகளைக் கருத்தில் கொண்டு, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் உள்ள சாலை மற்றும் கானைச் சீரமைத்துத் தர வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் நிலையம் முன்பு தச்சுத் தொழிலாளி தீக்குளிப்பு: நெல்லை அருகே பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:42:13 AM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் : டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
சனி 20, ஜூன் 2026 5:19:42 PM (IST)

குற்றாலத்தில் குளுகுளு சீசன் களைகட்டியது : ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!
சனி 20, ஜூன் 2026 3:26:04 PM (IST)

அரசுக்கு ரூ.1.92 கோடி வருவாய் இழப்பு: முன்னாள் பேரூராட்சித் தலைவருக்கு 3 ஆண்டு சிறை!
சனி 20, ஜூன் 2026 11:31:55 AM (IST)

நெல்லை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: 9 பேர் மீது வழக்குப்பதிவு!
சனி 20, ஜூன் 2026 11:03:42 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா கோலாகல தொடக்கம்:ஜூன் 28-ல் பெருந்தேரோட்டம்!
சனி 20, ஜூன் 2026 10:40:35 AM (IST)



BabuJun 22, 2026 - 06:49:47 PM | Posted IP 172.7*****