» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மகேந்திரகிரியில் அதிக எடை ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு!

வெள்ளி 3, ஜூலை 2026 8:35:22 AM (IST)

நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், அதிக எடை கொண்ட ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்குரிய செமி கிரையோஜினிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மகேந்திரகிரி இஸ்ரோ திரவ இயக்க திட்ட மையத்தில் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்குத் தேவையான கிரையோஜினிக் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு கட்ட சோதனைகள் தொடர்ச்சியாகச் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தற்போது அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் சுமந்து செல்லும் ராக்கெட்டுகளுக்காகச் 'செமி கிரையோஜினிக் என்ஜின்' தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த என்ஜினில் திரவ ஆக்சிஜனும், 'இஸ்ரோஜின்' என்ற சிறப்பு எரிபொருளும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

தயாரிக்கப்பட்டு வரும் இந்த புதிய என்ஜினின் பல்வேறு பாகங்கள் பகுதி, பகுதியாகப் பிரிக்கப்பட்டுச் சோதனை செய்யப்பட உள்ளன. இதன் முதற்கட்டமாக, என்ஜினுடைய மிக முக்கியமான பகுதியான 'இக்னிஷன்' (எரியூட்டும் தரம்) சோதனை ஏற்கனவே இரண்டு முறை வெற்றிகரமாக நடத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, நேற்று 3-ஆவது முறையாக 5 வினாடிகள் இந்த இக்னிஷன் சோதனை மீண்டும் நிகழ்த்திப் பார்க்கப்பட்டது. இந்த 3-ஆம் கட்ட சோதனையும் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளதாக இஸ்ரோ வட்டார விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். அடுத்தகட்டமாக, வரும் நாட்களில் எரியூட்டும் கால அளவு வினாடிகள் சிறிது சிறிதாக அதிகரிக்கப்பட்டு, பல்வேறு தீவிர சோதனைகள் தொடர உள்ளதாக இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory