» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பி சிவபிரசாத் பொறுப்பேற்பு
திங்கள் 27, ஜூலை 2026 12:42:47 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா சிவகங்கை மாவட்டத்திற்கு பணியிட மாற்றப்பட்டு, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த சிவபிரசாத், தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்ட சிவபிரசாத், இன்று காலை காவல் தலைமையகத்திற்கு வருகை தந்தார். முன்னதாக, அவருக்குக் காவல் துறை ஆயுதப்படை சார்பில் கம்பீரமான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டுத் தனது எஸ்பி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட காவல் அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்கள் நேரில் சந்தித்துத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை பட்டமளிப்பு விழாவில் மாணவிகள் கண்ணீர் : இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்!
செவ்வாய் 28, ஜூலை 2026 3:52:31 PM (IST)

திருமணமான 5 மாதங்களில் கொடூரம்: புதுப்பெண் வெட்டிக்கொலை - கணவர் நீதிமன்றத்தில் சரண்!
செவ்வாய் 28, ஜூலை 2026 8:28:34 AM (IST)

அரசு பள்ளியில் பிரம்பால் அடித்ததில் 10 மாணவிகள் காயம்: ஆசிரியை மீது வழக்குப்பதிவு
செவ்வாய் 28, ஜூலை 2026 7:48:07 AM (IST)

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு!
திங்கள் 27, ஜூலை 2026 5:34:27 PM (IST)

சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித் தபசுத் திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்!
திங்கள் 27, ஜூலை 2026 8:01:44 AM (IST)

திருநெல்வேலி புகைப்படக் கலை தொழிலாளர்கள் நலச் சங்கப் பொதுக்குழு: புதிய நிர்வாகிகள் தேர்வு!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:13:09 AM (IST)



BabuJul 28, 2026 - 05:32:24 AM | Posted IP 172.7*****