» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

அழகியபாண்டியபுரத்தில் இருந்து நரிக்குறவர் காலனி வரை சென்று வரும் அரசுப் பேருந்து சேவையை ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி கோட்டம் சார்பில், அழகியபாண்டியபுரம் பேருந்து நிலையத்தில் வைத்துப் பள்ளி மாணவ, மாணவியர்கள், மகளிர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து வழித்தட நீட்டிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
போக்குவரத்துத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். முருகன் இப்புதிய பேருந்து சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த வழித்தட நீட்டிப்பின் மூலம் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள், வேலைக்குச் செல்லும் மகளிர் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
தடம் எண் 38V: நெல்லை சந்திப்பிலிருந்து காலை 6:05 மணிக்குப் புறப்பட்டுத் தேவர்குளம் செல்லும் நகரப் பேருந்து மற்றும் மாலை 17:50 மணிக்கு நெல்லை சந்திப்பு வரும் பேருந்து, இனி நரிக்குறவர் காலனி வரை சென்று வருமாறு வழித்தடம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் ஆர். எஸ். முருகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் திருநெல்வேலி கோட்ட வணிகப் பிரிவு துணை மேலாளர், கட்டபொம்மன் நகர் கிளை மேலாளர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)

வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி மாந்திரீக பூஜை: பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:44:23 AM (IST)

விபத்தில் லோடுமேன் உயிரிழந்த வழக்கு: ரூ.66.26 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 3:29:46 PM (IST)

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய 141-வது ஆண்டு திருவிழா: திருத்தேர் பவனி கோலாகலம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:18:30 PM (IST)

நீச்சல் பயிற்சி அளிப்பதாகக் கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:43:48 AM (IST)


