» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பெண் நிர்வாகியிடம் ரகசிய வீடியோ இருந்த செல்போன் பறிப்பு: த.வெ.க. பிரமுகர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 8:44:02 AM (IST)
ஆறுமுகநேரி அருகே த.வெ.க. பெண் நிர்வாகியிடம் ரகசிய வீடியோக்கள் இருந்ததாகக் கூறப்படும் செல்போனைத் திருடிச் சென்ற விவகாரத்தில், நாடகமாடிய அக்கட்சியின் மற்றொரு நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தைச் சேர்ந்த சசிகுமாரின் மனைவி ரோஹிணி (35). தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) மாவட்ட செயற்குழு உறுப்பினரான இவர், கடந்த ஜூன் 26-ஆம் தேதி ஆறுமுகநேரி-அடைக்கலாபுரம் சாலையில் மொபட்டில் நின்றபடி, த.வெ.க. உறுப்பினரான ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்த சிபாஸ் (28) என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மொபட்டில் வைக்கப்பட்டிருந்த ரோஹிணியின் செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பினார். அவரைப் பிடிப்பது போலச் சென்ற சிபாஸ், மர்ம நபர் தப்பிவிட்டதாகக் கூறியுள்ளார். இது குறித்து ரோஹிணி அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மணப்பாடு பகுதியைச் சேர்ந்த த.வெ.க. உறுப்பினர் ரூஸ்வெல்ட் (44) என்பவருக்கும் ரோஹிணிக்கும் பழக்கம் இருந்துள்ளது. கட்சியில் பொறுப்பு வாங்கித் தருமாறு ரூஸ்வெல்ட் கேட்டு வந்த நிலையில், இருவரின் பழக்கம் தொடர்பான சில ரகசிய வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் ரோஹிணியின் செல்போனில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதிய ரூஸ்வெல்ட், செல்போனைக் கைப்பற்ற சிபாஸின் உதவிய நாடியுள்ளார். இதற்காக சிபாஸ், தனது நண்பரான உடன்குடி புனிதராஜ் என்பவரை வைத்து நாடகமாடிச் செல்போனைப் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்துச் சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்த சிபாஸை போலீசார் கைது செய்தனர்.
செல்போனைப் பறித்துச் சென்ற புனிதராஜ் ஏற்கனவே வேறு வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ளார். தற்போது புனிதராஜிடம் இருந்து செல்போனைப் பெற்று தலைமறைவாக உள்ள த.வெ.க. உறுப்பினர் ரூஸ்வெல்ட்டை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவரைப் பிடித்த பிறகே செல்போனில் இருந்த ரகசிய வீடியோக்கள் குறித்த முழு விவரமும் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
BalaAug 13, 2026 - 10:10:59 AM | Posted IP 172.7*****
ada pikkali neeyum oru paaliyal naayaa poda roosvelt
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:32:39 PM (IST)

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் மீது வழக்கு - 2 பெண்கள் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:35:26 AM (IST)

ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக ரமேஷ் பாபு நியமனம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:49:27 AM (IST)

சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 12, ஆகஸ்ட் 2026 4:43:51 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக.15ல் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:22:47 PM (IST)



naan thaanAug 13, 2026 - 01:45:07 PM | Posted IP 104.2*****