» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சனாதன தர்மத்தை கொச்சைப்படுத்தியதற்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்: எல்.முருகன்

திங்கள் 4, டிசம்பர் 2023 12:31:42 PM (IST)

சனாதன தர்மத்தை கொச்சைப்படுத்தியதற்கு மக்கள் சரியான பாடத்தை கற்பித்துள்ளார்கள் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் என 3 சட்டப்பேரவை தேர்தல்களிலும், பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியை பாஜக நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ‘’பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றியாக இதை பார்க்கிறோம். இந்த தேசத்தில் சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி இது பாஜகவிற்கு இழுபறிநிலை என்ற தேர்தல் கணிப்புகளை இந்த வெற்றி பொய்யாக்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்தியா கூட்டணியின் சனாதன தர்மத்தை கொச்சைப்படுத்தியதற்கு மக்கள் சரியான பாடத்தை கற்பித்துள்ளார்கள்’’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory