» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் ரூ.16ஆயிரம் கோடியில் மின்சார கார் நிறுவனம்: 25ஆம் தேதி அடிக்கல் நாட்டுவிழா!
புதன் 14, பிப்ரவரி 2024 7:47:38 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் வின் ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் அமைக்க 25ஆம் தேதி முதல்வர் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார் என்று சிப்காட் நிா்வாக இயக்குநா் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் வின் ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் அமைக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. மேலும், புரிந்துணா்வு ஒப்பந்தங்களை நடைமுறைக்கு கொண்டுவர தொழிற்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்நிறுவனம் அமைக்கப்படுவதற்கான இடங்களை சிப்காட் நிா்வாக இயக்குநா் செந்தில்ராஜ் தலைமையிலான குழுவினா் நேற்று ஆய்வு செய்தனா். அதைத் தொடா்ந்து, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னா், சிப்காட் நிா்வாக இயக்குநா் செந்தில்ராஜ் செய்தியாளா்களிடம் கூறும்போது, சில்லாநத்தம் சிப்காட் தொழில்பூங்காவில் 408 ஏக்கரில் அமையவுள்ள வின் ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் பணிகளைத் தொடக்கிவைக்கிறாா்.
இது தொடா்பாக அரசு அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றாா். கூட்டத்தில், தொழில் வழிகாட்டி நிறுவன நிா்வாக இயக்குநா் வே. விஷ்ணு, சிப்காட் செயற்பொறியாளா் தம்பிரான்தோழன், திட்ட அலுவலா் ஜோன்ஸ் மேரி சகாயராணி, மாவட்ட வருவாய் அலுவலா் ச. அஜய் சீனிவாசன், உதவி ஆட்சியா் பிரபு, வட்டாட்சியா்கள் பங்கேற்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தி.மு.க. உறுப்பினர் வைஷ்ணவி புகார் எதிரொலி : இன்ஸ்டாகிராம் பிரபலம் அதிரடி கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 11:13:33 AM (IST)

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் கட்சியில் இருந்து நீக்கம் : இபிஎஸ் நடவடிக்கை!
வெள்ளி 7, நவம்பர் 2025 10:50:05 AM (IST)

சிறுவனை கடத்திச்சென்று பாலியல் தொல்லை: அங்கன்வாடி பெண் ஊழியருக்கு 54 ஆண்டுகள் சிறை!
வெள்ளி 7, நவம்பர் 2025 8:26:03 AM (IST)

விஜயகாந்த் செய்த தவறை நான் செய்ய மாட்டேன்: சீமான் திட்டவட்டம்!
வியாழன் 6, நவம்பர் 2025 5:23:39 PM (IST)

ஐப்பசி பௌர்ணமி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:42:47 PM (IST)

இயற்கையைக் காப்போம்: கன்னியாகுமரி முதல் சென்னை வரை மிதிவண்டிப் பேரணி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:15:35 PM (IST)





RadhakrishnanFeb 18, 2024 - 12:59:18 PM | Posted IP 172.7*****