» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சைதை துரைசாமியை சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினி!

புதன் 14, பிப்ரவரி 2024 5:19:43 PM (IST)



சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் மறைவையொட்டி அவரை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி ஹிமாசல் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு நேற்று (பிப். 13) தகனம் செய்யப்பட்டது.  சென்னை தியாகராய நகர் அருகேவுள்ள மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. 

வெற்றி துரைசாமி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சைதை துரைசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory