» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மஹா சிவராத்திரி விழா: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

வியாழன் 7, மார்ச் 2024 10:03:31 AM (IST)

மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மகாசிவராத்திரி, பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 11-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச்சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 4 கால சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory