» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக மக்களை மறக்க முடியாமல் தவிக்கிறேன் : தூத்துக்குடியில் சீமான் பிரச்சாரம்!

சனி 30, மார்ச் 2024 3:10:37 PM (IST)



காதலித்த பெண்ணை மற்றொருவன் திருமணம் செய்து கொண்டு சென்றாலும் மறக்க முடியாமல் தவிப்பானோ அதே போன்று தான் தமிழக மக்களை மறக்க முடியாமல் இருக்கிறேன் என்று தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் வேட்பாளர் ரொவீனா ரூத்ஜோனை ஆதரித்து திரேஸ்ப்புரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் "அணு உலை மற்றும் ஸ்டெர்லைட் ஆலை ஆகியவைக்கு எதிராக நாம் போராடிய போது ஏரெடுத்தும் பார்க்காத கண்ணெடுத்தும் பார்க்காத கட்சிகளிடம் தான் நாம் அதிகாரத்தை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

அணு உலைக்கு எதிராக இங்கு உள்ள கட்சிகள் எதுவும் குரல் கொடுக்கவில்லை நாம் அணு உலை மீது உட்கார வில்லை அணுகுண்டு மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது  துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தது சொன்னது யார்?  என்பது குறித்து இதுவரை யாரும் சொல்லவில்லை. துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

7விழுக்காடு வைத்திருந்த தனக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை. ஆனால்  0. 7 விழுக்காடு வைத்திருந்த தமாகாவிற்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கி உள்ளார்கள். இப்படிப்பட்ட கேடுகெட்ட சின்னங்களுக்கு வாக்களித்து உங்கள் வாக்கை வீணாக்கி விடாதீர்கள். எதற்கெடுத்தாலும் நல்ல கடைக்கு போய் சாப்பாடு வேண்டும் நல்ல கடையில் தங்கம் வாங்க வேண்டும் நல்ல கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

ஆனால் உங்களை ஐந்து ஆண்டுகள் ஆளக்கூடிய நபர்களை நல்லவர்களை நீங்கள் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் எங்கள் 40 பேரை அனுப்பி பாருங்கள் அங்கே அவர்களை திணற அடித்து விடுவோம். இந்த தேர்தல் பத்திரத்தில் திமுக காசு வாங்கியுள்ளதா இல்லையா ஆனால் உங்களிடம் வரும்போது ஞானஸ்தானம் செய்துவிட்டு வந்தது போதும் தீயில் இறங்கி புனிதமாக வந்த சீதையை போடும் வருவார்கள் திமுக தற்பொழுது ஆரம்பித்துள்ள கட்சி போல வந்து வாக்கு கேட்பார்கள்.

நாங்கள் வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று சொல்லுவார்கள் அதை நம்பி விடாதீர்கள். பாரதிய ஜனதா கட்சி கலவரத்தால் வளர்ந்த கட்சி மணிப்பூர் கலவரத்திற்காக இவர்கள் போராடுகிறார்கள். குரல் கொடுக்கிறார்கள். ஆனால் என் இன சொந்தங்கள் தம்பிகள் தங்கைமார்கள் தாய்மார்கள் சிங்கள ராணுவத்தால் கொன்று குவிக்கப்படும்போது வன்புணர்வு செய்யும்போது இவர்கள் எங்கே போனார்கள். குரல் கொடுத்தார்களா? 

குஜராத் கலவரம் என்றாலும் மணிப்பூர் கலவரம் என்றாலும் இவர்களுக்கு எல்லாமே தேர்தல் தான் பதவி தான். கர்மவீரர் காமராஜர் நல்ல மனிதர்களை தேர்ந்தெடுங்கள் என்றார் அதே போன்று நல்ல மனிதர்களை 40 நாடாளுமன்ற தொகுதி தொகுதிகளிடம் தேர்ந்தெடுங்கள் உங்களுக்காக நாடாளுமன்றம் சென்று அங்கு உள்ள நபர்களை கண்ணில் விரலை விட்டு ஆட்டி விடுவார்கள்.

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் 20 நாடுகள் எதிர்த்த போதும் துணிந்து தனியாக நின்று போராடினார் அதேபோன்று எத்தனை கட்சிகள் எதிர்த்து நின்றாலும் அவர்களை எதிர்த்து போராடக் கூடிய குணம் எங்களிடம் உள்ளது 2026இல் எப்பாடுபட்டாவது தமிழகத்தில் ஆட்சியை அமைப்போம்.

மேலும் அவர் கூறுகையில் இலங்கையில் விடுதலைப் புலி பிரபாகரன் இருக்கும்போது இங்கு உள்ள மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததா சிறைபிடிக்கப்பட்டார்களா இல்லை எனவே எங்களுக்கு ஆதரவு அளித்தால் நாங்கள் அய்யனார் போன்று கடலில் துப்பாக்கியோடு ஒரு வீரனை நிறுத்தி மீனவர்களை காப்போம் என்றார்

மேலும் மீன்பிடி தொழிலை அரசே ஏற்று நடத்தி மீனவர்களுக்கு அதற்குரிய சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் தற்போது ஏற்றுமதி ரகம் வாய்ந்த மீன்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது நமக்கு கிடைப்பதெல்லாம் சாதாரண சாலை மீன் உள்ளிட்ட மீன்கள் தான் ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இங்குள்ள மக்களும் ஏற்றுமதி ரகம் வாய்ந்த மீன்களை சாப்பிடக்கூடிய நிலையை உருவாக்குவோம். 13 ஆண்டுகளாக உங்களுக்காக கத்தி கத்தி சேர்த்துக் கொண்டிருக்கிறேன் ஆகவே எங்களுக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் வாய்ப்பு தாருங்கள் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory