» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆ.ராசாவின் வாகனத்தை சோதனையிடாத பறக்கும் படை பெண் அதிகாரி சஸ்பெண்ட்!

சனி 30, மார்ச் 2024 4:06:40 PM (IST)

நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை, முறையாக சோதனை செய்யாத விவகாரத்தில் பறக்கும் படை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா போட்டியிடுகிறார். ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, கடந்த 25-ந்தேதி முதல் முறையாக நீலகிரிக்கு சென்றார். செல்லும் வழியில், கோத்தகிரியில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நீலகிரியை நோக்கி அவர் சென்று கொண்டிருந்தபோது, அவரது காரை பறக்கும் படை அதிகாரி கீதா தலைமையிலான குழு சோதனை செய்தது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. மேலும், ஆ.ராசாவின் வாகனத்தை, பறக்கும் படை அதிகாரி முறையாக சோதனை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நீலகிரி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அருணா இது தொடர்பாக விளக்கம் கேட்டு பறக்கும் படை அதிகாரி கீதாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மேலும் விசாரணைக்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பான விசாரணையானது இன்று நடைபெற்றது. விசாரணை முடிவில், தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக சோதனை செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பறக்கும் படை அதிகாரி கீதாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

சந்திரன்Mar 31, 2024 - 03:42:15 PM | Posted IP 162.1*****

அவன் திருடன் என்று தெரிந்தும் அவனை சோதனை செய்யாமல் விட்டது சாதி பாசமாக இருக்கும் அந்த கண்ணோட்டத்தில் பாருங்கள் சரியாக இருக்கும்

Mar 31, 2024 - 06:43:17 AM | Posted IP 172.7*****

அந்த 2ஜி குற்றவாளி திருடன் வாகனமா? அப்போ சரி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory