» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக ஜெ.பி.நட்டா பிரசாரம்!

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 12:30:14 PM (IST)

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா சாலைப் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவருக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு ஆதரவாக பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பரமக்குடியில் சாலைப் பேரணியில்  பங்கேற்று வாக்கு சேகரித்தார். 

அவருடன் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், தேனி எம்பி ரவீந்திரநாத்தும் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் ஐந்து சுயேச்சைகள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory