» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவில்பட்டியில் கள்ளநோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் திடீர் மரணம்!
செவ்வாய் 16, ஏப்ரல் 2024 4:08:34 PM (IST)
கோவில்பட்டியில் கள்ளநோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர், பாளை சிறையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (60). இவர் கடந்த 2000-ம் ஆண்டு கோவில்பட்டி கிழக்கு போலீசாரால் கள்ள நோட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஜெயக்குமார் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் ஜெயக்குமாரை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர்.
அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பாளை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அங்கு நேற்றிரவு சக கைதிகளுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு அவர் தூங்கச் சென்றுள்ளார். அப்போது நள்ளிரவில் திடீரென ஜெயக்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார். அவரை சிறைக் காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெயக்குமார் இறந்தார். இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
சனி 13, செப்டம்பர் 2025 5:30:14 PM (IST)

விஜய்யின் தி.மு.க. எதிர்ப்பு ஆரோக்கியமானது: தமிழிசை பேட்டி!
சனி 13, செப்டம்பர் 2025 4:49:11 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)

கல்வி கடன் ரத்து தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசுக்கு விஜய் கேள்வி!
சனி 13, செப்டம்பர் 2025 4:10:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகளவில் வருகிறது: கனிமொழி எம்பி பேச்சு!
சனி 13, செப்டம்பர் 2025 3:54:37 PM (IST)
