» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரஜினிகாந்த், அஜித் உட்பட திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு!

வெள்ளி 19, ஏப்ரல் 2024 10:41:33 AM (IST)



மக்களவைத் தேர்தலில் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் உட்பட சினிமா பிரபலங்கள் ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தினர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வெயிலில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ன சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் இருந்து அரசியல் தலைவர்கள், திரைப் பிரலங்கள், பொதுமக்கள் தங்களது வாக்கினை ஆர்வமாக செலுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமா பிரபலங்களான ரஜினிகாந்த், அஜித், சசிகுமார், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர். நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா ஆகியோர் தங்களது வாக்கினைப் பதிவு செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory