» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு அலுவலா் வீட்டில் ரூ. 48 லட்சம் திருட்டு: 2பேர் நீதிமன்றத்தில் சரண்!

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 8:33:05 AM (IST)

கோவில்பட்டியில் வட்டார வளா்ச்சி அலுவலா் வீட்டில் ரூ.48 லட்சம் திருடப்பட்ட வழக்கில் 2 இளைஞா்கள் நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, பாண்டவா்மங்கலம் ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் சிங்கராஜ். இவா், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலராக உள்ளாா். குடும்பத்தினா் ஏற்கெனவே வெளியூா் சென்றிருந்த நிலையில் இவா், கடந்த 8ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு அலுவலகம் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பினாா்.

அப்போது, மா்ம நபா்கள் கதவை உடைத்து வீடு புகுந்து, பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.48 லட்சத்தைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம். புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் சிவகங்கை மாவட்டம் வேளாண்குளத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சூா்யா (25), சிறுகுடி வேலூா் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் வேல்முருகன் (21) ஆகிய இருவரும் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற எண் 2இல் நேற்று சரணடைந்தனா். நீதிமன்ற நடுவா் பீட்டா் வழக்கை விசாரித்து, இருவரையும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து

m.sundaramApr 23, 2024 - 08:30:07 PM | Posted IP 162.1*****

IT official can also investigate how a Dy BDO could keep Rs 48 Lakh in house? whether the money is earned legally or illegally? He should explain how did he possesses the huge amount in case.Did he files IT returns for 2023-2024 (AE 2024-2025)? If not why?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory