» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்த பெருமாள் : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!!

வியாழன் 25, ஏப்ரல் 2024 8:53:23 AM (IST)



ஆழ்வார்திருநகரியில் தாமிரபரணி ஆற்றில் சாபம் பெற்றிருந்த மண்டூக மகரிஷிக்கு பெருமாள் மோட்சம் கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி கோவில்களில் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலும் ஒன்றாகும். இது நவதிருப்பதிகளில் ஒன்பதாவது தலமாகும். இங்கு ஆண்டுதோறும் நான்கு திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவை.

மேலும் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்தியல், கோஷ்டி நடந்தது. பின்னர் மாலை 4 மணியளவில் சுவாமி பொலிந்து நின்றபிரான் தோளுக்கினியானில் எழுந்தருளி மாடவீதி வழியாக திருகுருங்குடி மடத்திற்கு சென்றார். அங்கு திருமஞ்சனம் நடந்தது.

அன்று இரவு பொலிந்துநின்ற பிரான் சுவாமி தாமிரபரணி ஆற்றில் உள்ள பந்தலில் இறங்கி அலங்கரிக்கப்பட்டு, சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சப்தாவரணம் சப்பரத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்து தவளையாக சாபம் பெற்றிருந்த மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. சாத்துமுறை கோஷ்டிக்கு பின் மீண்டும் தோளுக்கினியானில் எழுந்தருளி மாட வீதி வழியாக கோவிலை சென்றடைந்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory