» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு: 5 பேர் மயக்கம்

வெள்ளி 26, ஏப்ரல் 2024 3:44:32 PM (IST)



நாகர்கோவில் மாநகராட்சி  குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின்  கலனில் திடீரென வாயு கசிந்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

குமரி மாவட்டம், நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அருகில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் சிலிண்டர் கசிவால் அங்கு பணியில் இருந்த  3 பேர் மயக்கம் அடைந்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து மீட்பு பணிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 பேர் மயக்கம் அடைந்தனர்.  

இதையடுத்து அவர்களை மீட்ட சக பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதையடுத்து குளோரின் வாயு கசிவு நிறுத்தப்பட்டதால் சிறிது நேரத்தில் சகஜ நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் நாகர்கோவிலில் பரபரப்பு நிலவியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory