» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை: ஆட்சியர்

ஞாயிறு 5, மே 2024 12:11:09 PM (IST)



அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில், தற்போது கோடை சீசன் நிலவி வருகிறது. இந்த நேரத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் உதகைக்கு படையெடுத்து வருகின்றனா்.

இதனால் குறுகிய நகரமான உதகை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 7-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது, மே 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளிமாநில, வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம்.

இ-பாஸ் எண்ணிக்கையில் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கப்படும். ஒரு வாகனத்திற்கு ஒரு இ-பாஸ் மட்டுமே போதுமானது. வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்தும், உள்நாட்டு மக்கள் தங்களது செல்போன் நம்பரை பதிவு செய்தும் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory