» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் நீட் தேர்வு மையத்தில் தவறான வினாத்தாள்? மாணவ, மாணவிககள் அதிர்ச்சி!

திங்கள் 6, மே 2024 12:56:40 PM (IST)



தூத்துக்குடியில் நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறான வினாத்தாள் வழங்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா முழுவதும் மற்றும் முதல் முறையாக வெளிநாடுகளிலிலும் நீட் தேர்வு நேற்று நடைபெற்றது இந்த தேர்வை லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதினர். தூத்துக்குடியில் அழகர் பள்ளியில் சுமார் 768 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். இந்த நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் பலருக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் முற்றிலுமாக 200 கேள்விகளும் மற்ற நீட் தேர்வு மையங்களில் வழங்கப்பட்ட வினாக்களில் இருந்து மாறுபட்டுள்ளது. 

மேலும் மற்ற மையங்களில் வழங்கப்பட்ட வினாத்தாள்களின் எண்ணிக்கை 28 ஆகவும் தூத்துக்குடி அழகர் பள்ளியில் வழங்கப்பட்ட நீட் தேர்வு வினாத்தாள்களின் எண்ணிக்கை 32 ஆகவும் இருந்துள்ளது. இந்த வினா தாள்கள் மற்ற மையங்களில் வழங்கப்பட்ட சரியான வினாத்தாள்களுக்கு  தேசிய தேர்வு முகமை சார்பில் q,r,s,t ஆகிய கோடும் தவறாக வழங்கப்பட்ட வினாத்தாள்களுக்கு m,n,o,pஆகிய கோடுகளும் வழங்கப்பட்டுள்ளது 

இது தேர்வு எழுதிய மாணவ மாணவியர் மற்றும் பெற்றோருக்கு வினா தாள்களை அதன் விடை குறித்து சரி பார்க்கும்போது அழகர் பள்ளியில் நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் தவறான வினாத்தாளாக வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி மற்றும் குழப்பம் அடைந்தனர். 

இதை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் இதற்கு மத்திய மாநில அரசுகள் மற்றும் தேசிய தேர்வு முகமை ஆகியவை உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய தீர்வு காண வேண்டும் தாங்கள் எழுதிய வினாத்தாள்களுக்கும் உரிய மதிப்பெண் வழங்கி ரேங்க் பட்டியல் மற்றும் கவுன்சிலிங் தங்களுக்கு தனியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

Kumarமே 6, 2024 - 01:02:21 PM | Posted IP 162.1*****

அப்படியானால் நாடு முழுவதும் ஒரேமாதிரி கேள்விதாள் இல்லை என்பது தெரிகிறது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory