» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு அரசு பேருந்துகள்!

செவ்வாய் 7, மே 2024 8:48:48 AM (IST)

சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோடை விடுமுறையை குதூகலமாக கழிக்க ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ரயில் மூலமாக திண்டுக்கல் வந்து சேரும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி அதிகாலை 4 மணி, 5.15 மணி, காலை 6.45 மணி, 7.30 மணி ஆகிய நேரங்களில் ரயில் நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து கட்டணம் ரூ.95, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து கட்டணம் ரூ.85. இதனை சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி கொண்டு கொடைக்கானலை சுற்றி பார்த்து மகிழலாம் என்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திண்டுக்கல் மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory