» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 9, மே 2024 4:51:35 PM (IST)

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் அனைத்து வாகனங்களிலும் மோட்டார் வாகன விதிகளை மீறி போலீஸ், வழக்கறிஞர், பிரஸ், டாக்டர் போன்று பதவிகளை குறிப்பதற்கான ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என  போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். இந்த தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில், சென்னையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை என பிறப்பித்த உத்தரவில் பல்வேறு குழப்பங்கள் உள்ளது. இந்த உத்தரவு சென்னைக்குள் மட்டும் பொருந்துமா? அல்லது மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்துமா? என விளக்கப்படவில்லை. வாகனங்களின் முன்பக்கம், பின்பிக்க கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், நடிகர்களின் படங்களை ஸ்டிக்கர்களாக ஒட்ட தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது. 

இந்த மனு இன்று (மே 09) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனு மீதான விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மருத்துவர்கள் ஸ்டிக்கர் ஒட்ட அனுமதி மறுப்பு

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு வழக்கை மே 22க்கு ஒத்திவைத்துள்ளது. அவசர காலங்களில், இந்த தடை தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து

எல்லாம்மே 9, 2024 - 05:05:02 PM | Posted IP 162.1*****

துட்டு முட்டாள்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory