» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவிட 50% மானியம் வழங்கும் திட்டம்
புதன் 17, ஜூலை 2024 12:48:01 PM (IST)
நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவிட 50% மானியம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்/ அலகு) 100 நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவிட 50% மானியம் வழங்கும் திட்டம் 2022-23 மற்றும் 2023-24–ஆம் ஆண்டுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தி முடிக்கப்பட்டதன் காரணமாக நடப்பாண்டில் இத்திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் நாட்டுக்கோழிப்பண்ணைகள் நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50% மானியம் ரூ.1,56,875/- மாநில அரசால் வழங்கப்படும். மீதமுள்ள 50% பங்களிப்பை வங்கி மூலமாகவோ, தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளிகள் திரட்ட வேண்டும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான நாட்டுக்கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படும்.
பயனாளியிடம் கோழிக்கொட்கை கட்ட குறைந்த பட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்த பகுதி மனித குடியிருப்பிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30% பயனாளிகள் தாழ்த்தப்பட்ட/ பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளியாகவோ, அவர்தம் குடும்பத்தினராகவோ இருத்தல் கூடாது.
மேற்கண்ட தகுதிவாய்ந்த விருப்பமுள்ள பயனாளிகள் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா/ அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள், 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் அளித்து பயனடைய மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் கேட்டுக்கொள்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் 17ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
புதன் 15, அக்டோபர் 2025 4:32:26 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அமைச்சர்கள் பேச்சை நீக்க கோரி அ.தி.மு.க. வெளிநடப்பு
புதன் 15, அக்டோபர் 2025 4:10:54 PM (IST)

தீபாவளியை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
புதன் 15, அக்டோபர் 2025 3:27:24 PM (IST)

காவல்துறை ரோந்து வாகனம் மீது திமுக நகர செயலாளர் கார் மோதல் - 6பேர் காயம்!
புதன் 15, அக்டோபர் 2025 3:20:24 PM (IST)

தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை: 21ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!
புதன் 15, அக்டோபர் 2025 12:38:23 PM (IST)

தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: தமிழக அரசு
புதன் 15, அக்டோபர் 2025 12:26:15 PM (IST)
