» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் விருப்பம்
புதன் 17, ஜூலை 2024 5:03:05 PM (IST)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டார். அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு, இன்று (ஜூலை 17) மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சென்றார். ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அவர் ஆம்ஸ்ட்ராங் படத்துக்கு மலர் தூவி ராம்தாஸ் அத்வாலே மரியாதை செலுத்தினார்.ராம்தாஸ் அத்வாலே நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொலை சம்பவம் அதிகரித்து வருவதால் தலைவர்களின் பாதுகாப்பு முக்கியம். கிருஷ்ணசாமி, திருமாவளவன் மற்றும் ஜான் பாண்டியன் உள்ளிட்ட தலைவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.
தமிழகத்தில் கலப்பு திருமணம் செய்பவர்கள் கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளேன். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி,ஐ., விசாரணை மூலம் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன் : தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மறுப்பு!
ஞாயிறு 22, மார்ச் 2026 1:26:35 PM (IST)

தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம்: பா.ஜ.க. பிரமுகர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு!
ஞாயிறு 22, மார்ச் 2026 8:57:20 AM (IST)

தூத்துக்குடியில் ஓடும் பேருந்தில் பயங்கர தீ விபத்து : 60 பயணிகள் உயிர் தப்பினர்!
ஞாயிறு 22, மார்ச் 2026 8:49:24 AM (IST)

பாஜவில் இருந்து வெளியேற முடிவு? – ஆலோசனைக் கூட்டம் குறித்து சரத்குமார் விளக்கம்
சனி 21, மார்ச் 2026 5:49:53 PM (IST)

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
சனி 21, மார்ச் 2026 5:06:31 PM (IST)

தமிழகத்தில் குடிநீர் கேன் மற்றும் பாட்டில் விலை உயர்வு: உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 4:17:49 PM (IST)

