» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மிளகாய்ப் பொடி தூவி பெண்ணிடம் 7 பவுன் நகைகள் பறிப்பு : மர்ம நபர்கள் கைவரிசை!

வியாழன் 1, ஆகஸ்ட் 2024 10:06:10 AM (IST)

நாசரேத் அருகே மளிகைக் கடையில் இருந்த பெண் மீது மிளகாய்ப் பொடி தூவி, 7 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம்,  நாசரேத் அருகே மூக்குப்பீறியில் உள்ள ஞானராஜ் நகரைச் சேர்ந்த கிளாடிவின் பிரபாகர் என்பவர், அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். அவர் நேற்று கடைக்கான பொருள்கள் வாங்குவதற்காக திருநெல்வேலிக்குச் சென்றிருந்தார். இதனால், அவரது மனைவி எஸ்கலின் பாத்திமா (34) கடையைக் கவனித்துக் கொண்டார். நண்பகலில் பைக்கில் வந்த இரு இளைஞர்கள் தண்ணீர் பாட்டில், தம்ளர் கேட்டனர். 

அவர் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுக்க முயன்றார். அப்போது இரு இளைஞர்களும் எஸ்கலின் பாத்திமாவின் முகத்தில் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி, அவர் அணிந்திருந்த சுமார் 7 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனராம். நகைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் எனக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் நாசரேத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் செல்வன் வழக்குப் பதிந்தார். மர்ம நபர்களை உதவி ஆய்வாளர் ராஜன், போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory