» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய வேன் டிரைவர் கைது!
வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 11:02:03 AM (IST)
தூத்துக்குடியில் மீன் வியாபாரம் செய்த பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முள்ளக்காடு தேவி நகரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் மனைவி பொன்மாரி (40), இவர் அத்திமரப் பட்டிரோட்டில் டாடா ஏஸ் வேனில் வைத்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், முத்தையாபுரம் சுந்தர் நகரை சேர்ந்த ராமசாமி மகன் பட்டாணி (43) என்பவர் தனது வேன் நிறுத்துமிடத்தில் வைத்து எப்படி மீன் வியாபாரம் செய்யலாம் என்று கேட்டாராம்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பட்டாணி பொன்மாரியை இரும்பு கம்பியால் தாக்கி, அவரது டாடா ஏஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினாராம். இது குறித்து பொன்மாரி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் வழக்குப் பதிந்து, பட்டாணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
சனி 13, செப்டம்பர் 2025 5:30:14 PM (IST)

விஜய்யின் தி.மு.க. எதிர்ப்பு ஆரோக்கியமானது: தமிழிசை பேட்டி!
சனி 13, செப்டம்பர் 2025 4:49:11 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)

கல்வி கடன் ரத்து தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசுக்கு விஜய் கேள்வி!
சனி 13, செப்டம்பர் 2025 4:10:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகளவில் வருகிறது: கனிமொழி எம்பி பேச்சு!
சனி 13, செப்டம்பர் 2025 3:54:37 PM (IST)
