» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடன் செயலி மிரட்டல்: இளம்பெண் தற்கொலை - தூத்துக்குடியில் பரபரப்பு!

வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 11:35:56 AM (IST)

தூத்துக்குடியில் கடன் செயலி மிரட்டல் காரணமாக இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி பால்பாண்டி நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர்  மது கார்த்திகேயன். இவர்  தனியார் ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காவிய சுதா (22), கடன் செயலி மூலம் ரூ.1லட்சம் கடன் வாங்கினாராம். அதில் ரூ.50ஆயிரம் பணத்தை கட்டியுள்ளார். 

கடந்த 2 மாதங்களாக தவனை கட்ட வில்லையாம். இதையடுத்து கடன் செயலியில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம நபர் பணத்தை கட்டவில்லை என்றால் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஆன்லைனில் வெளியிடுவேன் என்று மிரட்டினாராம். இதனால் மனமுடைந்த காவிய சுதா தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி ராஜா சுந்தர், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். கடன் செயலி மூலம் மிரட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் திருமணமான 2 மாதத்தில் அவர் உயிரிழந்துள்ளதால் சம்பவம் குறித்து தூத்துக்குடி கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory