» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண்ணை கழுத்தை இறுக்கி கொன்ற அண்ணன்..!
புதன் 7, ஆகஸ்ட் 2024 11:49:33 AM (IST)
மதுரையில் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண்ணை கயிறால் கழுத்தை இறுக்கி கொன்ற அண்ணனை போலீசார் தேடிவருகிறார்கள்.
மதுரை கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இவருடைய மகன் தமிழ்ராஜா (41). மகள் திலகவதி (36). இதில் தமிழ்ராஜா ஆட்டோ ஓட்டி வருகிறார். திலகவதிக்கும், ராணுவத்தில் பணியாற்றும் வில்லாபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் திருமணம் முடிந்து 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
சில மாதங்களுக்கு, முன்பு திலகவதிக்கும், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த ராகவேந்திரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்ததுடன், போனிலும் பேசி வந்தனர். நாளடைவில் இந்த கள்ளக்காதல் விவகாரம், திலகவதியின் கணவர் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
திலகவதியை கண்டித்தனர். ராணுவத்தில் உள்ள கண்ணனும் கண்டித்தார். ஆனால் அவர் கேட்காமல் தொடர்ந்து ராகவேந்திரனுடன் பேசி வந்துள்ளார். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டதால், மேலத்தோப்பு பகுதியில் உள்ள ெபற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால், குழந்தைகளை அவருடன் அனுப்ப கண்ணன் குடும்பத்தினர் மறுத்து, தங்களுடன் வைத்துக்கொண்டதாக தெரியவருகிறது.
தாய் வீட்டுக்கு வந்தபின்பும் திலகவதி, ராகவேந்திரன் பழக்கம் ெதாடர்ந்தது. இது திலகவதியின் அண்ணன் தமிழ்ராஜாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரும் தங்கையை கண்டித்தார். அதையும் திலகவதி பொருட்படுத்தவில்ைல.இதுதொடர்பாக அண்ணன், தங்கை இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றும் அவர்கள் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தமிழ்ராஜா, வீட்டில் இருந்த கயிறால் திலகவதியின் கழுத்தை இறுக்கினார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவர், சற்று நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தமிழ்ராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தமிழ்ராஜாவை தேடி வருகின்றனர்.