» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆக.13-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
புதன் 7, ஆகஸ்ட் 2024 12:12:42 PM (IST)
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஆக. 13 ஆம் தேதி நடைபெறுகிறது.
முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் ஆக. 13 ஆம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவை கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்த குறிப்பு தனியே அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் தெரிகிறது.