» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தண்டவாள பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரயில்கள் செங்கல்பட்டு வரை இயக்கம்!
வியாழன் 8, ஆகஸ்ட் 2024 10:42:11 AM (IST)
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்ட ரயில்கள் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, தண்டவாள பராமரிப்பு பணிக்காக வருகிற 18-ந் தேதி நெல்லை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (வ.எண்.20666) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, 16 மற்றும் 17-ந் தேதிகளில் சென்னையில் இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12631), செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12661), கன்னியாகுமரி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12633) ஆகியன எழும்பூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்படும்.
வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் நெல்லையில் இருந்து சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12632), செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12662), கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12634) ஆகியன செங்கல்பட்டு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
வருகிற 14-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக டெல்லி செல்லும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12641) விழுப்புரம், வேலூர், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 10:42:55 AM (IST)

முன்புபோல் ஊழல் செய்ய முடியாது என்று கவலையா? - முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி
புதன் 17, டிசம்பர் 2025 5:42:27 PM (IST)

திருவட்டார் வட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 4:59:03 PM (IST)

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது என்ன செயல்? நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி
புதன் 17, டிசம்பர் 2025 4:35:36 PM (IST)

மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன் நினைவு தினம்: சார் ஆட்சியர் மரியாதை செலுத்தினார்
புதன் 17, டிசம்பர் 2025 4:27:00 PM (IST)

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு: கனிமொழி எம்.பி தலைமையில் குழு நியமனம்!
புதன் 17, டிசம்பர் 2025 3:58:09 PM (IST)



SUNDHAR S.Aug 8, 2024 - 08:13:59 PM | Posted IP 162.1*****