» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் 24 பேர் பணியிடமாற்றம்!
வியாழன் 8, ஆகஸ்ட் 2024 4:50:01 PM (IST)
தமிழகம் முழுவதும் 24 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உள்துறை செயலர் தீரஜ் குமார் இன்று (ஆக.8) பிறப்பித்த உத்தரவு:சென்னை உயர்நீதிமன்ற வழக்குகளை கண்காணிக்கும் பிரிவு துணை ஆணையர் எஸ்.சக்தி கணேசன் சென்னை காவல் நவீன கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் மதுரை தெற்கு மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்பி-யான சுஜித் குமார் சென்னை பாதுகாப்பு பிரிவுக்கும், வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்பி-யான எஸ்.செல்வநாகரத்தினம் திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் (2) என்.எஸ்.நிஷா நீலகிரி மாவட்ட எஸ்பி-யாகவும், ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி-யான ஹரிகிரன் பிரசாத் சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராகவும், திருப்பத்தூர் எஸ்பி-யான ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி எஸ்பி-யாகவும், திருவண்ணாமலை எஸ்பி-யான கார்த்திகேயன் கோவை எஸ்பி-யாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி கிழக்கு துணை ஆணையர் ஆதர்ஷ் பசேரா பெரம்பலூர் எஸ்பி-யாகவும், தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பி-யான புக்யா சினேக பிரியா சென்னை அண்ணாநகர் துணை ஆணையராகவும், சென்னை பூக்கடை காவல் மாவட்ட துணை ஆணையர் ஸ்ரேயா குப்தா திருப்பத்தூர் எஸ்பி-யாகவும், தாம்பரம் காவல் மாவட்ட பள்ளிக்கரணை துணை ஆணையர் கவுதம் கோயல் சேலம் எஸ்பி-யாகவும், அங்கிருந்த அருண் கபிலன் நாகப்பட்டினம் எஸ்பி-யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் எஸ்பி-யான பெரோஸ்கான் அப்துல்லா கரூர் எஸ்பி-யாகவும், நீலகிரி எஸ்பி-யான சுந்தரவடிவேல் சென்னை பூக்கடை துணை ஆணையராகவும், காவல் நவீனமயமாக்கல் உதவி ஐஜி-யான டி.கண்ணன் விருதுநகர் எஸ்பி-யாகவும், தாம்பரம் காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜி.சுப்புலட்சுமி கோயம்பேடு துணை ஆணையராகவும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு (1) துணை ஆணையர் ஜி.ஸ்டாலின் மயிலாடுதுறை எஸ்பி-யாகவும், கரூர் எஸ்பி-யான கே.பிரபாகர் திருவண்ணாமலை எஸ்பி-யாகவும், சென்னை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் தர்மபுரி எஸ்பி-யாகவும், சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன் தென்காசி எஸ்பி-யாகவும், சேலம் தெற்கு துணை ஆணையர் என்.மதிவானன் வேலூர் எஸ்பி-யாகவும், ஆவின் விஜிலென்ஸ் எஸ்பி-யான மேகலினா ஐடென் சென்னை தலைமையிட துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் துணை ஆணையர் வி.வி.கீதாஞ்சலி, அதே பிரிவில் உள்ள மத்திய குற்றப்பிரவு (2) துணை ஆணையராகவும், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் டி.ரமேஷ் பாபு சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர், என்று உள்துறை செயலர் தீரஜ் குமார் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துரைமுருகனுடன் வேல்முருகன் எம்.எல்.ஏ. வாக்குவாதம் : சட்டப் பேரவையில் பரபரப்பு!
வெள்ளி 17, அக்டோபர் 2025 12:42:01 PM (IST)

நடிகர் ரஜினிகாந்துடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:34:48 AM (IST)

விவசாய பணியில் ஈடுபட்டு இருந்த போது மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 9:05:55 AM (IST)

உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 16, அக்டோபர் 2025 5:45:42 PM (IST)

தி.மு.க.வுக்கு தாளம் போடுவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம்: சபாநாயகருக்கு அன்புமணி கண்டனம்
வியாழன் 16, அக்டோபர் 2025 5:01:13 PM (IST)

கச்சத்தீவு மீட்பு குறித்து இலங்கை பிரதமரிடம் பேச வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 16, அக்டோபர் 2025 4:47:15 PM (IST)
