» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போக்குவரத்து விதிமீறல்களுக்கு ரூ.2,40,000 அபராதம்: போலீசார் அதிரடி!
சனி 10, ஆகஸ்ட் 2024 12:17:18 PM (IST)

கோட்டார் போக்குவரத்து காவல் நிலைய பகுதிகளில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், ராமன்புதூர் பள்ளி பகுதி அருகே, கோட்டார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்தல் ஆகிய விதிமுறைகளில் ஈடுபட்ட சுமார் 25 நபர்கள் மீது மோட்டார் வாகனச் சட்ட பிரிவுகளின் கீழ் 150 வழக்குகள் பதிவு செய்து ரூ.2 லட்சத்து 40ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அபராதம் செலுத்திய பின் முறையான பதிவு எண் இல்லாத வாகனங்களுக்கு முறையான பதிவு எண் பொருத்தி அனுப்பப்பட்டது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வாகனம் விடுவிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் சிறை: சட்டப்பேரவையில் புதிய மசோதாவை தாக்கல்!
சனி 26, ஏப்ரல் 2025 5:48:56 PM (IST)

பெண்ணை இழிவாகப் பேசுவது சுயமரியாதை அல்ல: கனிமொழி எம்பி பேச்சு
சனி 26, ஏப்ரல் 2025 5:03:44 PM (IST)

தோவாளை பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 26, ஏப்ரல் 2025 4:56:58 PM (IST)

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சனி 26, ஏப்ரல் 2025 12:43:35 PM (IST)

த.வெ.க. கட்சியின் தலைவர் விஜய் கோவை வருகை: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
சனி 26, ஏப்ரல் 2025 12:29:48 PM (IST)

காஷ்மீர் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்: ரஜினிகாந்த் பேட்டி
சனி 26, ஏப்ரல் 2025 11:36:10 AM (IST)
