» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இ.எஸ்.ஐ திட்டத்தில் சம்பள தகுதியை 30 ஆயிரமாக உயர்த்த விஜய் வசந்த் கோரிக்கை!
சனி 10, ஆகஸ்ட் 2024 12:41:42 PM (IST)

மாத சம்பளம் ரூபாய் 30,000 வரை பெரும் தொழிலாளர்களை இ.எஸ்.ஐ எனப்படும் தொழிலாளர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாயை சந்தித்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார்.
மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பணிபுரியும் சமூக பாதுகாப்பு உதவியாளர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட தொழில் முன்னேற்ற உறுதி (MACP) சலுகைகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தற்பொழுது மாத ஊதியமாக ரூபாய் 21,000 பெரும் ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ சேவைகள் வழங்கப்படுகின்றன. முன்பு ரூபாய் 15,000 என்றிருந்த இந்த வரம்பு 2016 ஆம் ஆண்டு ரூபாய் 21,000 என மாற்றி அமைக்கப்பட்டது. தற்பொழுது நிலவி வரும் பொருளாதார சூழ்நிலை மற்றும் விலைவாசியை கணக்கில் கொண்டு இதை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஆகையால் அரசு மிக அதிகமான தொழிலாளர்கள் பயனடையும் வகையில் இ.எஸ்.ஐ சலுகை பெரும் தொழிலாளர்களின் மாத சம்பள வரம்பை ரூபாய் 30,000 என உயர்த்த வேண்டும். மேலும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பணிபுரியும் சமூக பாதுகாப்பு உதவியாளர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட தொழில் முன்னேற்ற உறுதி (MACP) சலுகைகள் கிடையாது என்ற அமைப்பின் ஆணையை நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்தது. இதனை 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதி மன்றமும் ஏற்று கொண்டது.
ஆனால் இதற்க்கு பின்னரும் சமூக பாதுகாப்பு உதவியாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படவில்லை. ஆகையால் அமைச்சரகம் இந்த விஷயத்தில் தலையிட்டு பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பணிபுரியும் சமூக பாதுகாப்பு உதவியாளர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட தொழில் முன்னேற்ற உறுதி (MACP) சலுகைகள் வழங்க அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப் 4 வினாத்தாள் கசிய வாய்ப்பு? தனியார் பஸ்களில் எடுத்து செல்லப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 11, ஜூலை 2025 5:18:09 PM (IST)

ஆளுநரின் அதிகாரங்களில் முதல்வர் தலையிடக் கூடாது : ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி!
வெள்ளி 11, ஜூலை 2025 4:33:19 PM (IST)

உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்
வெள்ளி 11, ஜூலை 2025 12:27:27 PM (IST)

புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி
வெள்ளி 11, ஜூலை 2025 12:17:16 PM (IST)

அங்கன்வாடிகள் மூடப்படும் என்பது தவறான தகவல்: அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்
வெள்ளி 11, ஜூலை 2025 11:59:39 AM (IST)

சூடுபிடிக்கும் தேர்தளம் களம்: 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
வெள்ளி 11, ஜூலை 2025 11:16:32 AM (IST)

தமிழன்Aug 10, 2024 - 05:03:57 PM | Posted IP 162.1*****