» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆம்ஸ்ட்ராங் மனைவி, இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!
சனி 10, ஆகஸ்ட் 2024 12:53:39 PM (IST)

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 1,500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, கூட்டாளி திருவேங்கடம் உள்பட இதுவரை 22 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.
கொலை தொடர்பாக தி.மு.க., அ.தி.மு.க.,காங்கிரஸ்., பா.ஜ.க., த.மா.கா. கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வக்கீல்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் கொலைக்கான காரணம், மூளையாக செயல்பட்டவர்களின் பின்னணி இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. அதைக் கண்டறியும் வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை ஒருவர் பின் ஒருவராக போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மேலும் இந்த போராட்டத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 1,500 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிகாரிகள் கொடுமையால் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை: அன்புமணி குற்றச்சாட்டு
புதன் 9, ஜூலை 2025 10:46:28 AM (IST)

தமிழகத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்!
புதன் 9, ஜூலை 2025 10:35:19 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

திருச்செந்தூர் கோவில் மட்டுமல்ல மாதா கோவில் திருவிழாவாக இருந்தாலும் கடமையை செய்வேன்: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 8:12:52 PM (IST)

எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் அரசு செயல்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:56:47 PM (IST)

கடலூர் ரயில் விபத்துக்கு மாவட்ட ஆட்சியரே காரணமா? தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
செவ்வாய் 8, ஜூலை 2025 4:46:14 PM (IST)
