» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்திய பெண் கைது; குழந்தை மீட்பு
சனி 10, ஆகஸ்ட் 2024 5:32:27 PM (IST)
சேலம் அரசு மருத்துவமனையில், பிறந்து 5 நாளான ஆண் குழந்தையை கடத்திச்சென்ற பெண்ணைபோலீசார் கைது செய்தனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை மாஸ்க் அணிந்த பெண் நேற்று கடத்திச் சென்றார். இந்நிலையில், கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டுள்ளன. குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்தனர். குழந்தையை கடத்திச் சென்ற பெண், சேலம் வாழப்பாடி அருகே உள்ள காரிப்பட்டியை சேர்ந்த வினோதினி என தெரியவந்தது.பல வருடங்களாக குழந்தை இல்லாததால் மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடி சென்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசு மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக வினோதினி கொண்டு வந்தபோது, காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா : அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 5:11:49 PM (IST)

அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்... இனி அன்புமணிதான் எல்லாம்: ராமதாஸ் அறிவிப்பு!
சனி 25, ஜூலை 2026 4:58:54 PM (IST)

சிறுவனுடன் பழகி கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ வழக்குப் பதிவு: குமரியில் பரபரப்பு!
சனி 25, ஜூலை 2026 4:51:54 PM (IST)

எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? முதல்வர் வாய் திறப்பது எப்போது? - மு.க.ஸ்டாலின் கேள்வி
சனி 25, ஜூலை 2026 12:20:26 PM (IST)

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் மீண்டும் இடமாற்றமா? – அரசு தீவிர ஆலோசனை!
சனி 25, ஜூலை 2026 11:44:43 AM (IST)

மின்சாரம் தாக்கி 11 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 25, ஜூலை 2026 10:51:20 AM (IST)


