» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளியில் 5 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை : ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 11:06:04 AM (IST)
மார்த்தாண்டம் அருகே 5 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓவிய ஆசிரியையை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கேரள மாநிலத்தின் எல்லையில் வசித்து வரும் ஒரு தம்பதியின் 5 வயது மகள் குமரி மாவட்டம் பளுகல் போலீஸ் சரக பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தாள். சம்பவத்தன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவி, மாலையில் மிகவும் சோர்வாக வீட்டுக்கு திரும்பினார்.
இதை கண்ட தாயார் அவரிடம் இதுபற்றி விசாரித்தார். அப்போது அவர் கூறிய பதிலை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். அதாவது பள்ளியில் உள்ள ஓவிய ஆசிரியை ஒரு அறைக்கு அழைத்து சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மேலும் அவள் அந்தரங்க உறுப்பு வலிக்கிறது என கூறியுள்ளார்.
இதனால் பதற்றமடைந்த பெற்றோர் உடனே பாறசாலை அரசு மருத்துவமனைக்கு மாணவியை அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் இதுகுறித்து சிறுமியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் தனியார் பள்ளியின் ஓவிய ஆசிரியையான ஐஸ்வர்யா (26) என்பவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 5 வயதுக்கு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓவிய ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பொங்கல் விழா கோலாகலம்: ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
வியாழன் 15, ஜனவரி 2026 3:45:54 PM (IST)

பராசக்தி படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை : சிவகார்த்திகேயன்
புதன் 14, ஜனவரி 2026 5:06:41 PM (IST)

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு: அன்பில் மகேஷ் அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 5:01:38 PM (IST)

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)

அனைவரது வாழ்விலும் அன்பு, மகிழ்ச்சி, நலம், வளம் பெருகட்டும்: தமிழிசை பொங்கல் வாழ்த்து!
புதன் 14, ஜனவரி 2026 12:16:48 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள் : நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு!
புதன் 14, ஜனவரி 2026 8:55:08 AM (IST)


5 வயசுAug 12, 2024 - 12:41:37 PM | Posted IP 162.1*****