» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகை-இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை: முன்பதிவு தொடங்கியது!
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 11:37:53 AM (IST)

நாகையில் இருந்து இலங்கைக்கு வருகிற 16-ஆம் தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ‘செரியாபாணி’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு இருநாட்டு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது.
ஆனால் வடகிழக்கு பருவ மழையை காரணம் காட்டி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் சில நாட்களில் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இது இரு நாட்டு பயணிகள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு மீண்டும் ‘சிவகங்கை’ என்ற பெயரில் புதிய கப்பல் இயக்கப்பட உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் கடந்த 6-ஆம் தேதி நாகை துறைமுகம் வந்தது. இதையடுத்து கடந்த 10-ஆம் தேதி பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடந்தது.
இந்த நிலையில் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வருகிற 16-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இதில் பயணம் செய்ய விரும்புபவர்கள் www.sailindsri.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என கப்பலை இயக்கும் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவில் பஸ்கள் ஓடவில்லை: கோவையில் இருந்து புறப்பட்ட 50 பஸ்கள் எல்லையில் நிறுத்தம்!
புதன் 9, ஜூலை 2025 11:36:56 AM (IST)

அதிகாரிகள் கொடுமையால் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை: அன்புமணி குற்றச்சாட்டு
புதன் 9, ஜூலை 2025 10:46:28 AM (IST)

தமிழகத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்!
புதன் 9, ஜூலை 2025 10:35:19 AM (IST)

திருச்செந்தூர் கோவில் மட்டுமல்ல மாதா கோவில் திருவிழாவாக இருந்தாலும் கடமையை செய்வேன்: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 8:12:52 PM (IST)

எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் அரசு செயல்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:56:47 PM (IST)

கடலூர் ரயில் விபத்துக்கு மாவட்ட ஆட்சியரே காரணமா? தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
செவ்வாய் 8, ஜூலை 2025 4:46:14 PM (IST)
