» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் : கால அட்டவணை வெளியீடு
சனி 7, செப்டம்பர் 2024 5:36:33 PM (IST)
2024-25ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் 10.09.2024 முதல் 24.09.2024 வரை நடைபெறவுள்ளது..
இப்போட்டிகள் 12வயது முதல் 19 வரை பள்ளிப் பிரிவாகவும், 17வயது முதல் 25 வரை கல்லுரிப் பிரிவாகவும், 15வயது முதல் 35 வரை பொதுப் பிரிவாகவும் மற்றும் அரசு ஊழியர், மாற்றுத் திறனாளிகள் என 5 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ. 3000, 2000 மற்றும் 1000 வீதம் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது, தனிநபர் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்களும், குழுப் போட்டிகளில் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் சிறந்த விளையாட்டு வீர்ர் வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். போட்டிகளில் கலந்து கொள்ள பதிவு செய்தவர்களான பள்ளி கல்லுரி மற்றும் பொதுப் பிரிவினர் தங்களது ஆதார் அட்டையினையும், அரசு ஊழியர்கள் துறை வாரியான அடையாள அட்டையினைவும் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தங்களது அடையாள அட்டையினையும் காண்பித்த பிறகே போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
போட்டிகள் விபரம்
பொதுப்பிரிவினர் (ஆண்கள் மற்றும் பெண்கள்)
சிலம்பம் 14.09.2024 அன்றும், தடகளம் மற்றும் வாலிபால் ஆகிய போட்டிகள் 20.09.2024 அன்று அண்ணா விளையாட்டரங்கம் நாகர்கோவிலிலும், கபாடி போட்டிகள் 20.09.2024 அன்று அளத்தங்கரை உள் விளையாட்டரங்கத்திலும், இறகுப்பந்து போட்டிகள் 20.09.2024 அன்று கோணம் உள் விளையாட்டரங்கத்திலும் கிரிக்கெட் போட்டிகள் 23, 24.09.2024 அன்று ஸ்காட் கிறிஸ்தவ கல்லுரி மற்றும் அரசு தொழில்நுட்ப கல்லூரி கோணத்திலும் கேரம் போட்டிகள் 20.09.2024 அன்று ஹோம் சர்ச் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவிலிலும், 20.09.2024 அன்று ஆண்களுக்கான கால்பந்து போட்டிகள் கிறிஸ்டின் உடற்கல்வியியல் கல்லூரி நாகர்கோவிலிலும், பெண்களுக்கான கால்பந்து போட்டிகள் ஹோலி கிராஸ் கல்லூரியிலும் வைத்தும் நடைபெறவுள்ளது.
பள்ளிப்பிரிவினர் (ஆண்கள்)
சிலம்பம், தடகளம், மேஜைப்பந்து போட்டிகள் 10, 11.09.2024 அன்றும், கூடைப்பந்து போட்டிகள் 10, 11, 12.09.2024 அன்றும், நீச்சல் போட்டிகள் 17.09.2024 அன்றும், வாலிபால் போட்டிகள் 12, 13, 14.09.2024 அன்றும் அண்ணா விளையாட்டரங்கம் நாகர்கோவிலில் வைத்து நடைபெறவுள்ளது. கால்பந்து போட்டிகள் 10, 11, 12, 13, 14.09.20.24 அன்று நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிறிஸ்டின் உடற்கல்வியியல் கல்லூரியில் வைத்தும் இறகுப்பந்து போட்டிகள் 10, 11.09.2024 அன்று கோணம் உள் விளையாட்டரங்கத்திலும், கபாடி போட்டிகள் 10, 11.09.2024 அன்று அளத்தங்கரை உள் விளையாட்டரங்கத்தில் வைத்தும் கிரிக்கெட் போட்டிகள் 10, 11, 12, 13, 14.09.2024 அன்று ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, கோணம் அரசு தொழில்நுட்ப கல்லுரி மற்றும் பொன் ஜெஸ்லி கல்லூரியிலும் வைத்து நடைபெறவுள்ளது. கைப்பந்து போட்டிகள் 10, 11.09.2024 அன்று எஸ்.எல்.பி மேல்நிலைப்பள்ளி நாகர்கோவிலிலும், கேரம் போட்டிகள் 10, 11.09.2024 அன்று ஹோம் சர்ச் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவிலிலும், வளைகோல் பந்து 10, 11.09.2024 அன்று தெ.தி. இந்து கல்லூரியிலும், செஸ் போட்டிகள் 10.09.2024 அன்று ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி நாகர்கோவிலிலும் கோ கோ போட்டிகள் 10, 11.09.2024 அன்று ஸ்காட் உடற்கல்வியியல் கல்லூரியிலும் வைத்து நடைபெறவுள்ளது.
பள்ளிப்பிரிவினர் (பெண்கள்)
சிலம்பம் போட்டிகள் 12.09.2024 அன்றும் தடகளம், மேஜைப்பந்து போட்டிகள் 12, 13.09.2024 அன்றும், கூடைப்பந்து போட்டிகள் 13, 14.09.2024 அன்றும், நீச்சல் போட்டிகள் 17.09.2024 அன்றும், வாலிபால் போட்டிகள் 10, 11.09.2024 அன்றும் அண்ணா விளையாட்டரங்கம் நாகர்கோவிலில் வைத்து நடைபெறவுள்ளது. கால்பந்து போட்டிகள் 13, 14.09.20.24 அன்று ஹோலி கிராஸ் கல்லூரியிலும் வைத்தும் இறகுப்பந்து போட்டிகள் 12, 13.09.2024 அன்று கோணம் உள் விளையாட்டரங்கத்திலும், கபாடி போட்டிகள் 12, 13.09.2024 அன்று அளத்தங்கரை உள் விளையாட்டரங்கத்தில் வைத்தும் கிரிக்கெட் போட்டிகள் 17, 18.09.2024 அன்று ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, கோணம் அரசு தொழில்நுட்ப கல்லுரி மற்றும் பொன் ஜெஸ்லி கல்லூரியிலும் வைத்து நடைபெறவுள்ளது. கைப்பந்து போட்டிகள் 12, 13.09.2024 அன்று எஸ்.எல்.பி மேல்நிலைப்பள்ளி நாகர்கோவிலிலும், கேரம் போட்டிகள் 12, 13.09.2024 அன்று ஹோம் சர்ச் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவிலிலும், வளைகோல்பந்து 12.09.2024 அன்று தெ.தி. இந்து கல்லூரியிலும், செஸ் போட்டிகள் 11.09.2024 அன்று ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி நாகர்கோவிலிலும் கோ கோ போட்டிகள் 12, 13.09.2024 அன்று ஸ்காட் உடற்கல்வியியல் கல்லூரியிலும் வைத்து நடைபெறவுள்ளது.
கல்லுரிப் பிரிவினர் (ஆண்கள்)
சிலம்பம் 13.09.2024 அன்றும், தடகளம், கூடைப்பந்து, மேஜைப்பந்து போட்டிகள் 17.09.2024 அன்றும், நீச்சல் போட்டிகள் 18.09.2024 அன்றும், வாலிபால் போட்டிகள் 17, 18.09.2024 அன்றும் அண்ணா விளையாட்டரங்கம் நாகர்கோவிலில் வைத்து நடைபெறவுள்ளது. கால்பந்து போட்டிகள் 17, 18.09.20.24 அன்று நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிறிஸ்டின் உடற்கல்வியியல் கல்லூரியில் வைத்தும் இறகுப்பந்து போட்டிகள் 17, 18.09.2024 அன்று கோணம் உள் விளையாட்டரங்கத்திலும், கபாடி போட்டிகள் 17, 18.09.2024 அன்று அளத்தங்கரை உள் விளையாட்டரங்கத்தில் வைத்தும் கிரிக்கெட் போட்டிகள் 19, 20, 21.09.2024 அன்று ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, கோணம் அரசு தொழில்நுட்ப கல்லுரி மற்றும் பொன் ஜெஸ்லி கல்லூரியிலும் வைத்து நடைபெறவுள்ளது. கைப்பந்து போட்டிகள் 17, 18.09.2024 அன்று எஸ்.எல்.பி மேல்நிலைப்பள்ளி நாகர்கோவிலிலும், கேரம் போட்டிகள் 17, 18.09.2024 அன்று ஹோம் சர்ச் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவிலிலும், வளைகோல்பந்து 13.09.2024 அன்று தெ.தி. இந்து கல்லூரியிலும், செஸ் போட்டிகள் 12.09.2024 அன்று ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி நாகர்கோவிலிலும் வைத்து நடைபெறவுள்ளது.
கல்லுரி பள்ளிப்பிரிவினர் (பெண்கள்)
சிலம்பம் 13.09.2024 அன்றும், தடகளம், கூடைப்பந்து, மேஜைப்பந்து போட்டிகள் 18.09.2024 அன்றும், நீச்சல் போட்டிகள் 18.09.2024 அன்றும், வாலிபால் போட்டிகள் 19.09.2024 அன்றும் அண்ணா விளையாட்டரங்கம் நாகர்கோவிலில் வைத்து நடைபெறவுள்ளது. கால்பந்து போட்டிகள் 19.09.20.24 அன்று ஹோலி கிராஸ் கல்லூரியிலும் வைத்தும் இறகுப்பந்து போட்டிகள் 19.09.2024 அன்று கோணம் உள் விளையாட்டரங்கத்திலும், கபாடி போட்டிகள் 19.09.2024 அன்று அளத்தங்கரை உள் விளையாட்டரங்கத்தில் வைத்தும் கிரிக்கெட் போட்டிகள் 23.09.2024 அன்று ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, கோணம் அரசு தொழில்நுட்ப கல்லுரி மற்றும் பொன் ஜெஸ்லி கல்லூரியிலும் வைத்து நடைபெறவுள்ளது. 19.09.2024 அன்று எஸ்.எல்.பி மேல்நிலைப்பள்ளி நாகர்கோவிலிலும், கேரம் போட்டிகள் 19.09.2024 அன்று ஹோம் சர்ச் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவிலிலும், வளைகோல்பந்து 14.09.2024 அன்று தெ.தி. இந்து கல்லூரியிலும், செஸ் போட்டிகள் 13.09.2024 அன்று ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி நாகர்கோவிலிலும் வைத்து நடைபெறவுள்ளது.
மாற்றுத் திறனாளிகள்
கபாடி, தடகளம், இறகுப்பந்து, எறிபந்து, மேஜைப்பந்து மற்றும் கையுந்துபந்து போட்டிகள் 20.09.2024 அன்று அண்ணா விளையாட்டரங்கம் நாகர்கோவிலில் வைத்து நடைபெறவுள்ளது, இதில் இறகுபந்து போட்டிகள் மட்டும் கோணம் உள் விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
அரசு ஊழியர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்)
தடகளம், கபாடி, வாலிபால் போட்டிகள் 21.09.2024 அன்றும் அண்ணா விளையாட்டரங்கம் நாகர்கோவிலில் வைத்து நடைபெறவுள்ளது. இதில் இறகுபந்து போட்டிகள் 21.09.2024 அன்று கோணம் உள் விளையாட்டரங்கத்திலும், செஸ் போட்டிகள் 14.09.2024 அன்று ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி நாகர்கோவிலிலும் வைத்தும், கேரம் போட்டிகள் 21.09.2024 அன்று ஹோம் சர்ச் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவிலிலும் நடைபெறவுள்ளது.பள்ளி மற்றும் கல்லுரி மாணவ, மாணவிகளுக்கான மண்டல அளவிலான போட்டிகள்
பளு தூக்குதல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 12.09.2024 அன்றும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 13.09.2024 அன்றும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெறவுள்ளது. குத்துச்சண்டை போட்டியானது 17.09.2024 அன்று பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும், 18.09.2024 மற்றும் 19.09.2024 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெறவுள்ளது. வாள்சண்டை போட்டியானது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 18.09.2024 அன்றும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 19.09.2024 அன்றும் அண்ணா விளையாட்டரங்கம், திருநெல்வேலியில் வைத்து நடைபெறவுள்ளது (மேலும் விபரங்களுக்கு 7401703506). ஜூடோ போட்டியானது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 12.09.2024 அன்றும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 13.09.2024 அன்றும் அண்ணா விளையாட்டரங்கம், திருநெல்வேலியில் வைத்து நடைபெறவுள்ளது. டென்னிஸ் மற்றும் பீச் வாலிபால் போட்டியானது தூத்துக்குடியில் வைத்து நடைபெறவுள்ளது (மேலும் விபரங்களுக்கு 7401703508).
பள்ளி மற்றும் கல்லுரி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான போட்டிகள்
டிராக் சைக்கிளிங் போட்டிகள் 16.10.2024 முதல் 19.10.2024 வரை செங்கல்பட்டு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திலும், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் பள்ளிப்பிரிவில் 15.10.2024 முதல் 17.10.2024 வரையிலும், கல்லூரிப் பிரிவில் 18.10.2024 முதல் 20.10.2024 வரை AGB வேளச்சேரி காம்ளக்ஸ்லிலும், ஸ்குவாஷ் போட்டிகள் பள்ளிப்பிரிவில் 15.10.2024 முதல் 17.10.2024 வரையிலும், கல்லூரிப் பிரிவில் 18.10.2024 முதல் 20.10.2024 வரை சென்னை ஜவஹர்லால் உள் விளையாட்டரங்கத்திலும் வைத்து நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் கால்பந்து போட்டிகள் (Cerebral Palsy) 23.10.2024 மற்றும் 24.10.2024 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திலும் வைத்து நடைபெறவுள்ளது.
1. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவரும் காலை 8.00 மணிக்கு விளையாட்டு போட்டி நடைபெறும் இடங்களில் தங்கள் வருகையினை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
2. அளத்தங்கரையில் வைத்து நடைபெறும் கபாடி போட்டியில் கலந்து வீர்ர் வீராங்கனைகள் மேலும் விபரங்களுக்கு 94438 08753, 98655 65250 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
3. உள் விளையாட்டரங்கம் கோணத்தில் வைத்து நடைபெறும் இறகுப்பந்து போட்டியில் கலந்து கொள்பவர்கள் 9578786863 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
4. ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, கோணம் அரசு தொழில்நுட்ப கல்லுரி மற்றும் பொன் ஜெஸ்லி கல்லூரியில் வைத்து நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் கலந்து வீர்ர் வீராங்கனைகள் மேலும் விபரங்களுக்கு 99444 96677 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
5. கார்மல் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிறிஸ்டின் உடற்கல்வியியல் கல்லூரி மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரியில் வைத்து நடைபெறும் கால்பந்து போட்டியில் கலந்து வீர்ர் வீராங்கனைகள் மேலும் விபரங்களுக்கு 94420 77624 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
6. தெ.தி கல்லூரியில் வைத்து நடைபெறும் வளைகோல்பந்து போட்டியில் கலந்து வீர்ர் வீராங்கனைகள் மேலும் விபரங்களுக்கு 9442923164 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
7. ஸ்காட் உடற்கல்வி கல்லூரியில் வைத்து நடைபெறும் கோ கோ போட்டியில் கலந்து வீர்ர் வீராங்கனைகள் மேலும் விபரங்களுக்கு 94860 07969 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
8. எஸ்.எல்.பி பள்ளியில் வைத்து நடைபெறும் செஸ் போட்டியில் கலந்து வீர்ர் வீராங்கனைகள் மேலும் விபரங்களுக்கு 99438 67687 என்ற தொலைபேசி எண்ணிலும், கைப்பந்து போட்டியில் கலந்து வீர்ர் வீராங்கனைகள்89032 22813 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
9. ஹோம் சர்ச் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெறும் கேரம் போட்டியில் கலந்து வீர்ர் வீராங்கனைகள் மேலும் விபரங்களுக்கு 98948 44812 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.