» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் தேடப்பட்டவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு கைது!
திங்கள் 24, மார்ச் 2025 8:27:28 PM (IST)
இரணியல் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பியவரை விமான நிலையத்தில் போலீசார் மடக்கினர்
குமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி கிணற்றடி விளை பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (39), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-2 மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது ெதாடர்பாக தனுஷ் மீது இரணியல் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அவர் வெளிநாட்டு வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து இந்திய குடியுரிமை அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சூழலில் நேற்று இரவு தனுஷ், விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அவரை பிடித்த குடியுரிமை துறையினர், இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் திருவனந்தபுரம் சென்று தனுசை கைது செய்தனர்.
விசாரணைக்கு பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 10 வருடங்களுக்கு பிறகு தலைமறைவு போக்சோ குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி என்.டி.பி.எல். ஊழியர்கள் 23வது நாளாக ஸ்ட்ரைக் : மின் உற்பத்தி முற்றிலும் பாதிப்பு
வெள்ளி 9, மே 2025 11:25:02 AM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)
