» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுக்கு சம்மன்!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:19:50 PM (IST)
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவின் முன்னாள் வளர்ச்சி மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கனகராஜ், சேலம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கில் சயான், மனோஜ், தீபு, சதீஷன், ஜம்சேர் அலி, சந்தோஷ் சாமி, பிஜின் குட்டி, உதயகுமார், மனோஜ் சாமி உள்பட 12 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.அதிமுகவின் முந்தைய ஆட்சியில் வழக்கின் விசாரணை முடிந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில், வருகிற 27ந்தேதி கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வருமாறு சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)
