» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரியில் சிறுவர்கள் ஓட்டிய 20 வாகனங்கள் பறிமுதல் : போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை
திங்கள் 12, மே 2025 10:22:01 AM (IST)

குமரி மாவட்டத்தில் 18-வயது குறைவான ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டிய 20 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து காவல்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில் போக்குவரத்து காவல்துறையினர் விபத்தை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருண், அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ், மற்றும் போக்குவரத்து காவலர்கள் கன்னியாகுமரி மற்றும் சர்ச் ரோடு பகுதியில் வாகன தணிக்கையின் போது 18 வயது குறைவான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்த 20 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் 18 வயது குறைவான குழந்தைகளிடம் வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது என பெற்றோர்களிடத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 12, மே 2025 5:33:36 PM (IST)

தமிழகத்தில் மே 14, 15ல் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
திங்கள் 12, மே 2025 4:57:09 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 12, மே 2025 4:35:02 PM (IST)

கன்னியாகுமரி - ஹவுரா தினசரி ரயிலாக இயக்க வேண்டும் : பயணிகள் கோரிக்கை
திங்கள் 12, மே 2025 3:12:51 PM (IST)

பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு : மாநில தலைவர் வலியுறுத்தல்
திங்கள் 12, மே 2025 12:50:38 PM (IST)

கள்ளழகர் திருவிழாவில் புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம் : ஆளுநர் ரவி வாழ்த்து!
திங்கள் 12, மே 2025 12:34:52 PM (IST)
