» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக ஆட்சியில் பாலியல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்தனர் : கனிமொழி எம்பி குற்றச்சாட்டு
செவ்வாய் 13, மே 2025 5:34:53 PM (IST)
"பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக ஆட்சியில் யாரை காப்பாற்ற நினைத்தார்களோ அவர்களுக்கு தற்போது தண்டனை கிடைத்துள்ளது" என்று கனிமொழி எம்பி கூறினார்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடத்த கொடுமைக்கு வழங்கப்பட்ட நியாயமான தீர்ப்பு. குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்கள் வெளியிடாமல் அவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இந்தத் தீர்ப்பினால் பெண்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். முதல்வர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் பாலியல் வன்கொடுமை வளர்ச்சிக்கு சிபிஐக்கு மாற்றி தண்டனை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அது நிறைவேறி உள்ளது.
அதிமுக ஆட்சியில் இந்த வழக்கை விசாரிக்க முடியாமல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்தனர். ஆனால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கூறி வந்தனர் அதன் அடிப்படையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டு தீர்ப்பு கிடைத்துள்ளது. மேலும் பாலியல் குற்றங்களுக்கு எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் குற்றம் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு பாத்துக்காப்பான மாநிலமாக உள்ளது. இன்று அதிமுக வெட்கி தலைகுனிய வேண்டும். அதிமுக ஆட்சியில் யாரை காப்பாற்ற நினைத்தார்களோ அவர்களுக்கு தற்போது தண்டனை கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு நல்ல தீர்ப்பு என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)


