» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்து: 2 பெண்கள், குழந்தை உட்பட 5பேர் பரிதாப சாவு!

சனி 17, மே 2025 9:13:18 PM (IST)



சாத்தான்குளம் அருகே  கிணற்றுக்குள் கார் பாய்ந்து   விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை, 2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே வெள்ளாளன்விளையைச் சேர்ந்தவர் தேவதாஸ் மகன் மோசஸ் (50). கோவை துடியலூரில் மளிகை கடை நடத்தி வரும் இவர், அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மோசஸ் தனது சொந்த ஊரான வெள்ளாளன் விளையில் உள்ள கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக நேற்று இரவில் குடும்பத்தினர், உறவினர்களுடன் காரில் புறப்பட்டு வந்தார். 

அவர்கள் சொந்த ஊருக்கு செல்லும் வழியில் இன்று குற்றாலத்துக்கு சென்று அருவிகளில் குளித்தனர். பின்னர் மாலையில் குற்றாலத்தில் இருந்து நெல்லை, மூலைக்கரைப்பட்டி வழியாக காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். மோசஸ் காரை ஓட்டிச் சென்றார். மூலைக்கரைப்பட்டி பெருமாள் நகர் வழியாக சிந்தாமணியைக் கடந்து சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் அருகில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தரைமட்ட கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக பாய்ந்தது.

அந்த கிணற்றில் சுமார் 60 அடி ஆழத்துக்கும் அதிகமாக தண்ணீர் இருந்ததால் கார் மூழ்க தொடங்கியது. அப்போது காரில் இருந்து வெளியே வந்த மோசஸ் மகன் கெர்சோம் (29), ரவி கோயில்பிச்சை மகள் ஜெனிபா எஸ்தர், கெர்சோம் மனைவி சைனி கிருபாகரன் (26) ஆகிய 3 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, கிணற்றில் தத்தளித்த 3 பேரையும் மீட்டனர். 

தொடர்ந்து கிணற்றில் காருடன் மூழ்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனாலும் கிணற்றுக்குள் கார் மூழ்கியதால் உள்ளே சிக்கியவர்களை மீட்க முடியவில்லை. கிணற்றில் மூழ்கிய காரில் இருந்த மோசஸ், அவருடைய மனைவி வசந்தா (49), சந்தோஷ் மகன் ரவி கோயில்பிச்சை, அவருடைய மனைவி கெத்சியாள் கிருபா, கெர்சோம் மகன் ஸ்டாலின் (1½) ஆகிய 5 பேரை மீட்க முடியவில்லை. அவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி சுபகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஸ்டீபன், நாககுமாரி, தாசில்தார் இசக்கி முருகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.  சாத்தான்குளம், நாங்குநேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி, காரில் கயிறு கட்டி 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் வெளியே தூக்க முயன்றனர். ஆனாலும் மீட்க முடியவில்லை.



தொடர்ந்து ராட்சத பொக்லைன் எந்திரம் உதவியுடன் உடல்கள் மீட்கப்பட்டன. இறந்தவர்களின் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றுக்குள் கார் பாய்ந்து குழந்தை உள்பட 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory